OUR CLIENTS
தமிழகத்தில் இயக்கப்படும் புதுச்சேரி அரசு பேருந்துகளின் கட்டணம் அதிரடி உயர்வு!
தமிழகத்தில் இயக்கப்படும் புதுச்சேரி அரசு பேருந்துகளின் கட்டணம் அதிரடி உயர்வு! Posted on 23-Jan-2018 தமிழகத்தில் இயக்கப்படும் புதுச்சேரி அரசு  பேருந்துகளின் கட்டணம் அதிரடி உயர்வு!

புதுச்சேரி, ஜன.23-
தமிழகத்தில் இயக்கப் படும் புதுச்சேரி அரசுப் பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் அரசுப் பேருந்து கட்டணங்கள் கடந்த வாரம் உயர்த்தப் பட்டதை அடுத்து, தமிழகத்தில் இயக்கப்படும் புதுச்சேரி அரசுப் பேருந்துகளுக்கான கட்டணத்தை உயர்த்தி புதுச்சேரி அரசு நேற்று அறிவித்துள்ளது.

புதுச்சேரி அரசு சாலைப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், புதுச்சேரி மாநிலத்துக்குள் இயக்கப்படும் அரசு பேருந்துகளின் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. புதுச்சேரியில் இருந்து தமிழகத்துக்கு இயக்கப் படும் அரசு பேருந்துகளின் கட்டணம் மட்டுமே உயர்த்தப்படுகிறது. இந்த கட்டண உயர்வு ஜனவரி 22ம் தேதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, புதுச்சேரி - கிழக்குக் கடற்கரை சாலை - சென்னை செல்லும் அரசுப் பேருந்து கட்டணம் - ரூ.100ல் இருந்து ரூ.145 ஆகவும், புதுச்சேரி - பைபாஸ் சாலை - சென்னை செல்லும் பேருந்துக் கட்டணம் ரூ.100ல் இருந்து ரூ.140 ஆகவும், புதுச்சேரி - சென்னை செல்லும் குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துக் கட்டணம் ரூ.200ல் இருந்து ரூ.315  ஆகவும் உயர்த்தப் படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுவை -காரைக்கால் பேருந்து க்கான கட்டணம் ரூ.80ல் இருந்து ரூ.120 ஆகவும்,  புதுவை - பெங்களூரு பேருந்து கட்டணம் ரூ.215ல் இருந்து ரூ.290 ஆகவும்,  புதுச்சேரி - தமிழகம் - திருப்பதி செல்லும் பேருந்து கட்டணம் ரூ.170ல் இருந்து ரூ.290 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

Label