OUR CLIENTS
பிஹாரில் 4 கோடி பேர் மனித சங்கிலி
பிஹாரில் 4 கோடி பேர் மனித சங்கிலி Posted on 23-Jan-2018 பிஹாரில் 4 கோடி பேர் மனித சங்கிலி

பாட்னா, ஜன. 23-
பிஹாரில் வரதட்சிணை, குழந்தை திருமணத்துக்கு எதிரான பிரச்சாரத்தை முதல்வர் நிதிஷ் குமார் கடந்த காந்தி ஜெயந்தியின்போது தொடங்கினார். இந்த சமூக சீர்திருத்தங்களை வலியுறுத்தி நிதிஷ் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக அவரது தலைமையில் பிஹாரில் நேற்று முன்தினம் விழிப்புணர்வு மனித சங்கிலி அமைக்கப்பட்டது. பாட்னாவில் முதல்வர் நிதிஷ் மனித சங்கிலியை தொடங்கிவைத்தார். பல்வேறு நகரங்கள், கிராமங்களில் 13,688 கி.மீ. தொலைவுக்கு 4 கோடிக்கும் அதிகமானோர் மனித சங்கிலி அமைத்தனர். 40-க்கும் மேற்பட்ட ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் மனித சங்கிலி படம் பிடிக்கப்பட்டது.

Label