OUR CLIENTS
பத்மாவத் திரைப்பட விவகாரம் உச்சநீதிமன்றத்தில் 4 மாநில அரசுகள் மேல்முறையீடு
பத்மாவத் திரைப்பட விவகாரம் உச்சநீதிமன்றத்தில் 4 மாநில அரசுகள் மேல்முறையீடு Posted on 23-Jan-2018 பத்மாவத் திரைப்பட விவகாரம் உச்சநீதிமன்றத்தில் 4 மாநில அரசுகள் மேல்முறையீடு

புதுடெல்லி, ஜன.23-
பத்மாவத் திரைப் படத்திற்கு எதிராக ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளன. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள பத்மாவத் திரைப்படத்தில், ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக கூறி கர்னி சேனா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இத்திரைப்படம், வரும் 25ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதற்கு ராஜஸ்தான் உள்ளிட்ட 4 மாநில அரசுகள் திரையிட தடை விதித்தன. ஆனால் இந்தத் தடையை,  உச்சநீதிமன்றம் நீக்கியது. பத்மாவத் படத்திற்கு வழங்கப்பட்ட திரைப்பட தணிக்கை வாரிய சான்றிதழை ரத்து செய்யக்கோரிய மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், பத்மாவத் படத்திற்கு தடை விதிக்கக் கோரி, ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப் பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் நேற்று சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் சார்பில் வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், மனு மீது இன்று விசாரணை நடைபெறும் என அறிவித்துள்ளது.

Label