OUR CLIENTS
வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு?
வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு? Posted on 23-Jan-2018 வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு?

புதுடெல்லி, ஜன. 23-
புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள ஓம் பிரகாஷ் ராவத், ஆதார் அட்டையை வாக்காளர் அட்டையுடன் இணைப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஆதார் விவரங்கள் திருடப்படுவதாக தொடர்ந்து எழுந்து வரும் பல குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், உச்ச நீதிமன்றத்தில் ஆதார் அட்டை சட்டப்பூர்வமானது தானா, என்ற வழக்கு நடந்து வருகிறது. இதற்கிடையே, தேர்தல் ஆணையராக இருந்த, ஓம் பிரகாஷ் ராவத், இன்று முதல் இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்கிறார். 

இதுகுறித்து அவர் பேசியபோது, "தலைமை தேர்தல் ஆணையராக எனது முக்கிய பணி, நாடு முழுவதும் தேர்தல் பணிகள் நியாயமாகவும் நேர்மையாகவும் நடக்க வேண்டும் என்பது தான். எல்லோரையும் ஒருங்கிணைத்து, தேர்தல் முறைகளில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும்" என்றார். 

மேலும், "ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்தில் குடியேறுபவர்கள், ராணுவத்தினர் போல ஓட்டளிக்க முடியுமா என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம். என்னை பொறுத்தவரை ஆதார் அட்டையை, வாக்காளர் அட்டையுடன் இணைக்க வேண்டும். விரல் ரேகை போன்றவற்றால் வாக்காளர்கள் ஓட்டளிக்கும் முன் சரிபார்க்கப்பட வேண்டும்" என்றும் கூறினார்.

Label