OUR CLIENTS
வித்யா பாலனுக்கு சிறந்த நடிகை விருது
வித்யா பாலனுக்கு சிறந்த நடிகை விருது Posted on 23-Jan-2018 வித்யா பாலனுக்கு சிறந்த நடிகை விருது

மும்பை, ஜன. 23-
ஜியோ-பிலிம்பேர் விருது விழாவில் வித்யா பாலனுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. 63-வது ஜியோ-பிலிம்பேர் விருது விழா மும்பையில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் 2017-ம் ஆண்டின் சிறந்த பாலிவுட் படங்கள், நடிகர், நடிகைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த படத்துக்கான விருது ‘இந்தி மீடியம்’ திரைப்படத்துக்கு கிடைத்தது. சிறந்த இயக்குநருக்கான விருது ‘பரேலி கி பர்பி’ படத்தை இயக்கிய அஸ்வினி அய்யருக்கு வழங்கப்பட்டது. ‘இந்தி மீடியம்’ படத்தில் சிறப்பாக நடித்த இர்பான் கானுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், ‘தும்ஹாரி சுலு’ படத்தில் சிறப்பாக நடித்த வித்யா பாலனுக்கு சிறந்த நடிகைக்கான விருதும் வழங்கப்பட்டன. இதேபோல பல்வேறு பிரிவுகளில் ஜியோ-பிலிம்பேர் விருதுகள் வழங்கப்பட்டன.

Label