OUR CLIENTS
ஆசியான் நாடுகளுடன் இந்தியா தோளோடு தோள்நிற்கும்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேச்சு!
ஆசியான் நாடுகளுடன் இந்தியா தோளோடு தோள்நிற்கும்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேச்சு! Posted on 26-Jan-2018 ஆசியான் நாடுகளுடன் இந்தியா தோளோடு தோள்நிற்கும்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேச்சு!

புதுடெல்லி, ஜன.26-
உள்ளடங்கிய, சீரான மற்றும் சமமான விதி கள் சார்ந்த பிராந்திய கட்டமைப்பை உருவாக்க இந்தியா ஆசியான் நாடுகளுடன் தோளோடு தோள் நிற்கும் என்று இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார். ஆசியான் நாடுகளின் தலைவர்களும் அரசு களும் அளித்த கௌரவத்தை கோவிந்த் பெற்றுக்கொண்டார். அவர்களுக்கு மதிய உணவு விருந்தளித்தார். 

தெற்காசிய தலைவ ர்களுடன் பேசிய குடியரசுத் தலைவர் தெரிவித்ததாவது: தெற்காசிய நாடுகளுடன் கொண்டிருந்த பழைய உறவுகளை மேம்படுத்தி அதன் அரசியல், பாதுகாப்பு, பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகள் இந்தியாவின்.  ‘’கீழைக் கொள்கை நடைமுறை விதிகளி’’ன்படி மீண்டும் வலுப்படுத்தப்படும்.

இந்த சூழலில், ஆசியாவின் அமைதி நிலைநாட்டுதல், ஸ்திரத் தன்மை மற்றும் பிராந்திய வளம் போன்றவற்றில் ஆசியானின் பங்களிப்பை இந்தியா பெரிதும் மதிக்கிறது. ஆசியானின் ஒற்றுமை மற்றும் மையத்தன்மைக்கான இந்தியாவின் ஆதரவு என்றும் உண்டு. உள்ளடங்கிய, சீரான மற்றும் சமமான விதிகள் சார்ந்த பிராந்திய கட்டமைப்பை தொடங்க இந்தியா ஆசியான் நாடுகளுடன் தோளோடு தோள் நிற்கும்.தெற்காசிய நாடுகளுடன் இந்தியாவுக்கு வரலாற்று ரீதியாகவும் பூகோள ரீதியாகவும் பிணைப்பு உண்டு.

கலாச்சாரம், வர்த்தகம் தொடர்பு, கருத்துக்கள், சிந்தனை ஆகியவை - ஒரு பொதுவான துணி ஒன்றில் நாம் ஒன்றாக நெய்யப்பட்டுள்ளோம். நமது கூட்டுறவு, பாரம்பரியத்தின் அடிப்படையில் அமைந்தது. வலுவான மக்கள் தொடர்புகளுக்கு அடித்தளம் இது ஆயிரம் ஆண்டுகளாக வளர்க்கப் படுகிறது என்பதுதான். நமது இந்திய--&ஆசியான் உறவுகள் என்பது, தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட ஜனவரி 28, 1992லிருந்தே கூட்டுறவை ஏற்படுத்திக்கொண்டு நீண்டதூரம் கடந்து வந்து விட்டோம். இந்தியாவின் பயன்மிக்க பங்குதாரராக ஆசியான் உள்ளது. இந்தியா மற்றும் ஆசியானுக்கும் இடையே 30 பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. பல்வேறு துறைகள் சார்ந்து வருடாந்திர மாநாடுகள் மற்றும் ஏழு அமைச்சர்கள் அளவிலான கூட்டங்களும் நடந்துள்ளன. இவ்வாறு குடியரசுத் தலைவர் தெரிவித்தார். தெற்காசிய கூட்டமைப்பு நாடுகளாக (ஆசியான்) தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், மியான்மர் (பர்மா), கம்போடியா, லாவோஸ் மற்றும் புரூனே ஆகியவை உள்ளன. ஆசியான் உறுப்பினர்களான 10 நாடுகளின் தலைவர்களும் புரூனேவின் சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியா, இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடாடோ, பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ ரோ டட்டெட், கம்போடியா பிரதமர் ஹன் சென் மற்றும் சிங்கப்பூர் பிரதம மந்திரி லீ ஹெச். லியோங் ஆகியோரும் குடியரசுத் தலைவர் மாளிகையை பார்வையிட்டனர்.

தாய்லாந்தின் பிரதம மந்திரி பிரையுட் சான்-ஓ-சா, மியான்மர் மாநில ஆலோசகர் ஆங் சான் சூ கீ, வியட்நாமிய பிரதமர் ந்கூயென் இக்சுவான் ஃபூக் மற்றும் லாவோ றிஞிஸி 
இன் பிரதம மந்திரி தாங்லோன் சிசோலித் ஆகியோரும் மதிய உணவுக்கு வந்தனர். இத்தலைவர்கள் அனைவரும் இந்தியாவில் ஆசியன்-இந்திய உச்சி மாநாட்டில் கலந்து கொள்வார்கள். இன்று நடைபெற  உள்ள (ஜனவரி 26) இந்தியாவின் 69 வது குடியரசு தின கொண்டாட்டங்களில் அவர்கள் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்துகொள்கிறார்கள்.

Label