OUR CLIENTS
குடியரசு தின விழா முதல் முறையாக 10 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு!
குடியரசு தின விழா முதல் முறையாக 10 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு! Posted on 26-Jan-2018 குடியரசு தின விழா முதல் முறையாக 10 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு!

புதுடெல்லி, ஜன.26-
 டெல்லியில் இன்று (26-ஆம் தேதி) நடைபெறும் குடியரசு தின விழாவில், முதல் முறையாக 10 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.  கிழக்கு ஆசிய நாடுகளுடன் நல்லுறவு வைத்திருக்க வேண்டும் என்ற அளவில் இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை (லுக் ஈஸ்ட் பாலிசி) இருந்தது. அந்த நாடுகளுடன் அரசியல், கலாசாரம், பொருளாதாரம் ஆகியவற்றில் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அந்தக் கொள்கை மாறியுள்ளது. 

கிழக்கு ஆசிய நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் நோக்கமாகும். அதற்கேற்ப, கிழக்கு ஆசிய நாடுகளுக்கான வெளியுறவுக் கொள்கை உருவாக்கப்பட்டு வருகிறது. அந்தக் கொள்கையை, டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கும் கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த 10 தலைவர்களின் முன்னிலையில் மத்திய அரசு அறிவிக்கும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.

இந்நிலையில், டெல்லி ராஜபாதையில் வரும் 26-ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின அணி வகுப்பில், ஆசியான் அமைப்பைச் சேர்ந்த தாய்லாந்து, வியத்நாம், இந்தோனேசியா, மலேசியா, பிலிஃப்பின்ஸ், சிங்கப்பூர், மியான்மர், கம்போடியா, லாவோஸ், புரூனே ஆகிய கிழக்கு ஆசிய நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை நடந்த இந்திய குடியரசு தின விழாக்களில் 2 பேருக்கு மேல்  சிறப்பு விருந்தினர்களை இந்தியா அழைத்த தில்லை.

இந்த ஆண்டு முதல் முறையாக ஆசியான் அமைப்பை சேர்ந்த 10 நாடுகளின் தலைவர்கள் குடியரசு தின விழா சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு விஐபிக்கள் அமரும் மேடை சுமார் 100 அடி அகலத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. குடியரசு தின விழாவில், முதல் முறையாக 10 நாட்டு தலைவர்கள் பங்கேற்பதை முன்னிட்டு தில்லியில் பலத்த பாதுபாப்பு மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Label