OUR CLIENTS
பிரதமர் மோடியின் முதலீட்டாளர்கள் அழைப்பு குறித்து ப.சிதம்பரம் கிண்டல்!
பிரதமர் மோடியின் முதலீட்டாளர்கள் அழைப்பு குறித்து ப.சிதம்பரம் கிண்டல்! Posted on 26-Jan-2018 பிரதமர் மோடியின் முதலீட்டாளர்கள்  அழைப்பு குறித்து ப.சிதம்பரம் கிண்டல்!

புதுடெல்லி, ஜன.26-
தாவோஸ் உலகப் பொருளாதார மாநாட்டில் வெளிநாட்டு முதலீட்டாளர் களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்த அன்று இந்தியாவில் வன்முறை தலைவிரித்தாடியது என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் டுவிட்டரில் கிண்டல் தெரிவித்து கருத்து பதிவிட்டுள்ளார்.

சமாதானத்துடன் கூடிய செல்வ செழிப்பு வேண்டும் என எதிர்பார்க்கும் முதலீட்டாளர்கள் இந்தியா விற்கு வாருங்கள் என பிரதமர் மோடி உலகப் பொருளாதார மாநாட்டில் உரையாற்றினார். பிரதமர் மோடி வெளிநாடு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்த அதே சமயம், பத்மாவத் படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்த வன்முறை கும்பலின் தாக்குதலுக்கு அகமதாபாத் உள்ளானது. ”உத்தர பிரதேசத்தில் பொது இடங்களில் உல்லாசமாக இருந்த 6 இளம் ஜோடிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிகழ்வுகள் நாட்டின் அமைதிக் கும் நன்னடத்தைக்கும் பங்கம் விளைவிப்பதாக அமைந்தன” என்று டுவிட்டரில் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர், இணை அமைச்சரின் டார்வின் பரிணாம கோட்பாடு குறித்த கருத்தை மனிதத்தன்மை இல்லாமல் விமர்சித்துள்ளார். இந்து பெண் முஸ்லிம் இளைஞரை திருமணம் செய்து கொள்வதை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது என்றும் ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடி தாவோஸில் இந்தியாவை முதலீட்டிற்கான இடம் என்று புகழ்ந்த நிலையில் இந்நிகழ்வுகள் அனைத்தும் நடந்துள்ளது என்று டுவிட்டரில் ப.சிதம்பரம் கிண்டல் அடித்துள்ளார்.

Label