OUR CLIENTS
பென்னாகரம் அருகே ஆசிரியரே இல்லாமல் இயங்கும் தொடக்கப்பள்ளி!
பென்னாகரம் அருகே ஆசிரியரே இல்லாமல் இயங்கும் தொடக்கப்பள்ளி! Posted on 26-Jan-2018 பென்னாகரம் அருகே ஆசிரியரே  இல்லாமல் இயங்கும் தொடக்கப்பள்ளி!

பென்னாகரம், ஜன.26-
 பென்னாகரம் அருகே ஆசிரியரே இல்லாமல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதனால் அங்குள்ள மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்கப்பட்டுள்ளது. பென்னாகரம் அருகே காட்டுநாயக்கனஅள்ளி கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 40 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஓராசிரியர் பள்ளி என்பதால், சக்தி என்பவர் தலைமை ஆசிரியராகவும், ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார். 1 முதல் 5வகுப்பு வரையில் உள்ள மாணவ, மாணவிகளை ஒரே அறையில் அமரவைத்து பாடம் எடுத்து வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக அவர் பள்ளிக்கு வரவில்லை. இதனால் மாணவ, மாணவிகள் காலையில் வந்து வெறுமனே அமர்ந்து விட்டு, மாலையில் வீடு திரும்புகின்றனர். பாடம் நடத்த யாரும் இல்லாததால், விளையாடி நேரத்தை போக்குகின்றனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த, பென்னாகரம் தொகுதி எம்எல்ஏ இன்பசேகரன், அப்பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தார். மேலும், உதவி தொடக்க கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலரிடம், உடனடியாக கூடுதல் ஆசிரியர் நியமிக்க கோரிக்கை விடுத்தார். அதிகாரிகளும் ஆசிரியரை நியமிக்கிறோம் என்ற உறுதியை மட்டும் அளித்துள்ளனர். இதனிடையே, நேற்றும் பள்ளிக்கு ஆசிரியர் சக்தி வரவில்லை என கூறப்படுகிறது. இதுபற்றி பென்னாகரம் உதவி தொடக்க கல்வி அலுவலர் அண்ணாதுரையிடம் கேட்டபோது, ‘பள்ளி தலைமை ஆசிரியர் சக்தி மருத்துவ விடுப்பில் சென்று விட்டார். அவருக்கு பதில் மாற்று ஆசிரியர்களை அங்கு அனுப்பி வருகிறோம். மாணவர்களின் கல்வி திறன் பாதிக்காத அளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,’ என்றார்.

Label