OUR CLIENTS
சென்னை காவல் இணை ஆணையர் மனோகரன் உள்ளிட்ட 23 அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருது!
சென்னை காவல் இணை ஆணையர் மனோகரன் உள்ளிட்ட 23 அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருது! Posted on 26-Jan-2018 சென்னை காவல் இணை ஆணையர் மனோகரன்  உள்ளிட்ட 23 அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருது!

சென்னை, ஜன.26-
இந்திய அரசு 2018 ஆம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காவல்துறையின் 23அலுவலர்களுக்கு குடியரசுத் தலைவர் விருதுகளை அறிவித்துள்ளது.

மேற்கண்ட விருதுகள் அனைத்திந்திய அளவில் தனிச்சிறப்புடன் பணியாற்றும் காவல்துறை அலுவலர்களுக்கு குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் ஆகிய நாட்களில் ஆண்டிற்கு இருமுறை வழங்கப்படுகின்றன. காவல்துறை அலுவலர்களின் செயல்பாடு, சாதனைகள் மற்றும் நன்மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.
இந்திய குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான (பீவீstவீஸீரீuவீsலீமீபீ sமீக்ஷீஸ்வீநீமீ னீமீபீணீறீ) காவல் விருதுகள் தமிழ்நாடு காவல்துறை அலுவலர்கள் சென்னை சட்டம் ஒழுங்கு இணை ஆணையர் மனோகரன் மற்றும் காவலர் நலன் கூடுதல் டிஜிபி ராஜிவ் குமார் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மெச்சத்தகுந்த பணிக்கான குடியரசு தலைவர் விருது 21 காவல் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

1. அ.ராதிகா. காவல் கண்காணிப்பாளர். ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை. மேற்கு சரகம். சென்னை. 2) ஆர்.லலிதா லட்சுமி. காவல் கண்காணிப்பாளர். பொருளாதாரக் குற்றப்பிரிவு. சென்னை. 3) எஸ்.மல்லிகா. துணை காவல் ஆணையர். மத்திய குற்றப்பிரிவு பெருநகர காவல் சென்னை. 4) பா.சாமுண்டீஸ்வரி காவல் கண்காணிப்பாளர். தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகம். சென்னை. 5) ச.லட்சுமி. துணை காவல் ஆணையர். சட்டம் மற்றும் ஒழுங்கு. கோயமுத்தூர் நகரம். 6) எஸ்.இளங்கோ. கூடுதல் காவல் கண்காணிப்பாளர். ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை. சிறப்பு புலனாய்வு பிரிவு. சென்னை. 7) என்,மோகன்ராஜ;. கூடுதல் காவல் கண்காணிப்பாளர். காவல் பயிற்சிப்பள்ளி. ஆவடி. 8) கே,இராஜேந்திரன். கூடுதல் காவல் கண்காணிப்பாளர். தனிப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை. தலைமையகம். சென்னை. 9) எ.பி.செல்வன். காவல் உதவி ஆணையாளர். தி நகர் சரகம். சென்னை பெருநகர காவல்.10) எ.சுப்பராயன். காவல் உதவி ஆணையாளர். தரமணி சரகம். சென்னை பெருநகர காவல். 11) ஜி.ஹெக்டர் தர்மராஜ். காவல் துணை கண்காணிப்பாளர். ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை நாகர்கோவில். 12) எம்.இ.ராமச்சந்திரமுர்த்தி. காவல் ஆய்வாளர். ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை. சிறப்பு புலனாய்வு பிரிவு. சென்னை. 13) எ.அருளரசு ஜஸ்டின். காவல் ஆய்வாளர். தனிப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை சென்னை. 14) எ.குமாரவேலு. காவல் ஆய்வாளர். ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை. சிறப்பு புலனாய்வு பிரிவு. சென்னை. 15) வி.பாஸ்கரன். காவல் ஆய்வாளர். ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை. சென்னை. 16) கே.மோகன்குமார். காவல் சார்பு ஆய்வாளர். முதலமைச்சரின் பாதுகாப்பு பிரிவு, தலைமையகம். சென்னை. 17) எஸ்.வேணுகுமரன். காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர். காவல் கணிணி பிரிவு. மாநில குற்ற ஆவண காப்பகம்.  சென்னை. 18) பி.செல்வராஜு. காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர். ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு  துறை கோயமுத்தூர். 19)கே.ரவி. காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர். நில அபகரிப்பு[ தடுப்பு பிரிவு  நீலகிரி மாவட்டம். 20) எஸ்.எம்.மதிவேந்தன். காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர். ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை. சிறப்பு புலனாய்வு பிரிவு. சென்னை. 21) என்.வெங்கட சரவணன். தலைமை காவலர் நீலாங்கரை காவல் நிலையம். பெருநகர காவல் சென்னை.

Label