OUR CLIENTS
விதிகளுக்கு புறம்பாக செயல்படும் மணல்குவாரிகளை மூட தமிழக அரசுக்கு உத்தரவு
விதிகளுக்கு புறம்பாக செயல்படும் மணல்குவாரிகளை மூட தமிழக அரசுக்கு உத்தரவு Posted on 16-Feb-2018 விதிகளுக்கு புறம்பாக செயல்படும் மணல்குவாரிகளை மூட தமிழக அரசுக்கு உத்தரவு

 சென்னை, பிப்.16-
ஆற்று மணல் அள்ளுவதற்கான டெண்டரில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வருமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் அரசு மணல் குவாரிகளில் பெரிய அளவில் முறைகேடுகள் நடப்பதாக தொடரப்பட்ட வழக்கில் விதிப்படி ஒரு மீட்டர் ஆழத்திலும், 25 ஹெக்டேர் பரப்பளவிலும் மணல் அள்ளப்பட வேண்டிய நிலையில் 6 மீட்டர் ஆழத்திற்கும், 75 ஹெக்டேர் பரப்பிலும் மணல் அள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.  காவிரியும், கொள்ளிடமும் கால்வாய்களை விட பல அடி ஆழத்துக்கு சென்றுவிட்டதாகவும், கிணறுகளில் 20 அடியில் தண்ணீர் இருந்த நிலையில் தற்போது 80 அடிக்கு கீழ் சென்றுவிட்டதாகவும் கூறப்பட்டிருந்தது. நேரடி விற்பனையில் அரசு ஈடுபடாததால் இடைத்தரகர்களின் தலையீடு அதிகரித்து மணல் விற்பனையில் கொள்ளை நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுவதால் சுற்றுசுழல் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்தனர். மணல் தட்டுபாடு காரணமாக 1 யூனிட் மணல் வெளிச் சந்தையில் 20 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாவதாகவும் கூறினர். மணல் குவாரிகள் விதிகளுக்கு உட்பட்டு செயல்படுவதை அரசு உறுதி செய்யவும், விதிகளுக்கு புறம்பாக செயல்படும் குவாரிகளின் உரிமைத்தை உடனடியாக ரத்து செய்யவும் உத்தரவிட்டனர்.

குவாரிகளில் சிசிடிவி கேமிரா பொருத்தி கண்காணிக்கவும் மணல் லாரிகளில் ஜி.பி.எஸ். கருவி போன்ற மொபைல் ஆப்-ஐ பயன்படுத்தவும் உத்தரவிட்டனர். மணல் அள்ளுவதற்கான ஒப்பந்தத்தை குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களை அழைத்துக் கொடுக்கும் நடைமுறையை ஒழித்து வெளிப்படையான முறையில் டெண்டர் நடத்தவும் உத்தரவிட்டனர். அதிகளவில் மணல் அள்ளப்பட்டதால் காவிரி ஆற்றில் குளிக்க சென்றபோது மனுதாரரின் மகன் உயிரிழந்ததற்கு இழப்பீடாக 8 வாரத்துக்குள் 26 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Label