OUR CLIENTS
மோடி கேர் திட்டத்தில் கர்நாடகமும் இணையாது - முதல்வர் சித்தராமையா
மோடி கேர் திட்டத்தில் கர்நாடகமும் இணையாது - முதல்வர் சித்தராமையா Posted on 19-Feb-2018 மோடி கேர் திட்டத்தில் கர்நாடகமும் இணையாது -  முதல்வர் சித்தராமையா

பெங்களூரு, பிப்.19-


கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு, ‘மோடி கேர்திட்டத்தில் இணைய மாட்டோம் என்று அறிவித்துள்ளது.


மோடி கேர்என்றழைக்கப்படும், தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தில், ஒவ்வொரு குடும்பத்திற்கும், சிகிச்சைக்காக, ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை காப்பீடு வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள், இத்திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் இணையப் போவதில்லை என்று   மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி, சமீபத்தில் அறிவித்தார்


இதைத் தொடர்ந்து, கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் அரசும், ‘மோடி கேர்திட்டத்தில் இணைய மாட்டோம் என்று அறிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஏற்கனவே சுகாதார திட்டம் சிறப்பாக  செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட யாசாஸ்வினி  ஆரோக்கியா சுரக் ஷா திட்டம் தொடர்ந்து செயல்படும் என்று முதல்வர் சித்தராமையா  கூறினார்.

Label