OUR CLIENTS
சத்ரபதி சிவாஜி பிறந்தநாளையொட்டி துணை குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை
சத்ரபதி சிவாஜி பிறந்தநாளையொட்டி துணை குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை Posted on 20-Feb-2018 சத்ரபதி சிவாஜி பிறந்தநாளையொட்டி  துணை குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை

புதுடெல்லி, பிப்.20-
சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு துணை குடியரசு தலைவர் வெங்கைய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நேற்று மரியாதை செலுத்தியுள்ளனர்.

சஹாஜி மற்றும் ஜிஜாபாய் ஆகியோரின் இளைய மகன் சத்ரபதி சிவாஜி மகாராஜ். பூனேவில் இருந்து 60 கிமீ வடக்கில், ஜூன்னாரில் உள்ள சிவனேரி கோட்டையில் 1627 ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதியன்று பிறந்தார் சிவாஜி.  நேற்று நாடு முழுவதும் சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் தலைவர்கள் பலர், அவருக்கு தங்கள் மரியாதையை செலுத்தி வருகின்றனர்.

துணை குடியரசு தலைவர் வெங்கைய்யா நாயுடு டுவிட்டரில்,  ”இந்தியாவின் தலைசிறந்த அரசராக விளங்கிய சத்ரபதி சிவாஜிக்கு அவரது பிறந்தநாளில் நான் மரியாதை செலுத்துகிறேன். அவரது வீரம், போர் யுக்திகள், நிர்வாக திறன், முற்போக்கான மேற்பார்வை மற்றும் பெண்களுக்கு மரியாதை போன்ற நற்குணங்களால் மதிக்கப்படுகின்றார். அவரது புகழ்மிக்க துணிச்சலான செயல்கள் ஒவ்வொரு இந்தியருக்கும் முன்னுதாரணமாக என்றும் நிலைத்திருக்கும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதேபோல் பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில்,  ”சிவாஜி மஹாராஜ் அவர்களின் பிறந்தநாளான நேற்று அவருக்கு தலை வணங்குகிறேன்” என்று பதிவிட்டிருந்த பிரதமர், இதனுடன் ஒரு வீடியோவையும் இணைந்திருந்தார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் டுவிட்டர் பதிவில், "ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் என்ற செய்தியை மக்களிடையே பரப்பி, மக்களின் அரசு என்பதை உணர்ந்து ஆட்சி புரிந்த சத்ரபதி சிவாஜி மஹராஜ்-ஐ நான் வணங்குகிறேன்” என தன் மரியாதையை செலுத்தியுள்ளார்.சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு, பண சந்தைகள் நேற்று மூடப்பட்டுள்ளன.

Label