OUR CLIENTS
உதயநிதி ஸ்டாலின் மீது மு.க.அழகிரி பாய்ச்சல்
உதயநிதி ஸ்டாலின் மீது மு.க.அழகிரி பாய்ச்சல் Posted on 20-Feb-2018 உதயநிதி ஸ்டாலின் மீது மு.க.அழகிரி பாய்ச்சல்

தாயில்பட்டி, பிப்.20-
உதயநிதி ஸ்டாலினின் அரசியல் பிரவேசம் குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு மு.க. அழகிரி பதில் அளித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டியை சேர்ந்த தி.மு.க. தொண்டர் கொடியரசனின் மகள் கார்த்தீஸ்வரியின் திருமணம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மு.க.அழகிரி திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் அவர் அங்கிருந்து காரில் புறப்பட்டார். அப்போது நிருபர்கள் அவரிடம், உதயநிதி ஸ்டாலின் அரசியல் பிரவேசம் குறித்து கேட்டனர். அதற்கு அவர் பதில் அளிக்கும்போது, அரசியல் சாக்கடை தான். யார் வேண்டுமானாலும் வரலாம் என்று பதில் கூறினார்.  பின்னர் நிருபர்கள் கேள்விக்கேட்க தொடங்கினர். ஆனால் அவர் அங்கிருந்து காரில் சென்று விட்டார்.

Label