OUR CLIENTS
தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் கமல்ஹாசன் சந்திப்பு
தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் கமல்ஹாசன் சந்திப்பு Posted on 20-Feb-2018 தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் கமல்ஹாசன் சந்திப்பு

சென்னை, பிப்.20-
சென்னை - கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை நடிகர் கமல்ஹாசன் நேற்று சந்தித்துப் பேசினார்.

தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன் வரும் பிப்ரவரி 21-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்வதாகவும், அன்றைய தினம் கட்சியின் பெயரை அறிவிக்கப் போவதாகவும் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்த சுற்றுப் பயணத்தை முதல்கட்டமாக ராமேஸ்வரத்தில் ஆரம்பித்து பின் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட மக்களை சந்திக்க உள்ளதாகவும், மக்களின் ஆதரவோடு இந்த சுற்றுப் பயணம் தொடங்கிகிறேன் கரம் கோர்த்திடுங்கள் எனவும் தெரிவித்திருந்தார்.  சுற்றுப் பயணத்திற்கு முன்பு தனக்கு பிடித்தவர்களையும், அரசியலில் மூத்தவர்களையும் சந்தித்து ஆலோசனை பெற்றார் கமல்ஹாசன், ஞாயிற்றுக் கிழமை அன்று சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் திமுக தலைவர் மு. கருணாநிதி ஆகியோரை நடிகர் கமல்ஹாசன் சந்தித்துப் பேசினார். முன்னதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணுவையும், முன்னாள் தேர்தல் ஆணையர் டி.என் சேஷனையும் கமல்ஹாசன் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை, நேற்று காலை நடிகர் கமல்ஹாசன் சந்தித்துப் பேசினார்.  இந்த சந்திப்புக்குப் பின்பு கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்த பொழுது கூறியதாவது:  அரசியலில் எனக்கு மூத்தவரான விஜய்காந்த்தை சந்தித்து, எனது அரசியல் பயணத்திற்கு அவரது வாழ்த்துக்களைப் பெற்றேன். நீங்கள் எல்லாம் அரசியலுக்கு வரவேண்டும் என என்னை விஜயகாந்த் வாழ்த்தினார். திராவிட அரசியலை பின்பற்றி நான் வெற்றி பெறுவேன், சாதித்துக் காட்டுவேன். நானும் அரசியல் தலைவரான பிறகு, விஜயகாந்தை அவரது அலுவலகத்தில் சந்திப்பது பொருத்தம்தான்.  இவ்வாறு, கமல்ஹாசன் செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.

Label