OUR CLIENTS
அரசு குடியிருப்புகள், பள்ளிக் கட்டடங்கள், காவலர் குடியிருப்புகள், காவலர் பாளையம் முதல்வர் திறப்பு
அரசு குடியிருப்புகள், பள்ளிக் கட்டடங்கள், காவலர் குடியிருப்புகள், காவலர் பாளையம் முதல்வர் திறப்பு Posted on 21-Feb-2018 அரசு குடியிருப்புகள், பள்ளிக் கட்டடங்கள், காவலர் குடியிருப்புகள், காவலர் பாளையம் முதல்வர் திறப்பு

சென்னை, பிப்.21-
அரசு ஊழியர் குடியிருப்புகள், பள்ளிக் கட்டிடங்கள், காவலர் குடியிருப்புகள், காவலர் பாளையம், காவல்நிலையம், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் கோட்ட அலுவலகம் ஆகியவற்றை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி திறந்துவைத்தார். 

அரசு குடியிருப்புகள் இக்கட்டிடத் திறப்புகள் பற்றி ஜெயலலிதா முதல்வராக இருந்தபொழுது சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவிப்புகள் வெளியிட்டார். சென்னை, கே.கே. நகரில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான 3.73 ஏக்கர் நிலப்பரப்பில், காலியாக உள்ள இந்த இடத்தில் பன்னடுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் என்று அறிவித்தார்கள்.
அதன்படி, 3.73 ஏக்கர் நிலப் பரப்பளவில் 110 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 407 சுயநிதி திட்ட குடியிருப்புகள் (352 மத்திய வருவாய் பிரிவு குடியிருப்புகள் மற்றும் 55 குறைந்த வருவாய் பிரிவு குடியிருப்புகள்) மற்றும் 154 இடமாறுதல் அரசு ஊழியர் குடியிருப்புகளை  தமிழ்நாடு முதலமைச்சர்  எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் நேற்று காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்கள்.

சென்னை, மைலாப்பூர், சீத்தம்மாள் காலனியில் 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேற்பார்வை பொறியாளர்களுக்கான 2 அடுக்குமாடி வாடகை குடியிருப்புகள்; தஞ்சாவூர் மாவட்டம், பிள்ளையார்பட்டி கிராமத்தில் சுயநிதி திட்டத்தின் கீழ்  2 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 உயர் வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகள், விருதுநகர் மாவட்டம், அல்லம்பட்டி மற்றும் வில்லிபத்திரி கிராமங்களில் மனை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 38.91 ஏக்கர் பரப்பளவில் 19 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான அனைத்து கட்டமைப்புகளுடன் கூடிய 541 மனைகள், என மொத்தம் 133 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புகள் மற்றும் மனைகளை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். பள்ளிக்கட்டிடங்கள் பள்ளிக் கல்வித் துறை சார்பில் திருவாரூர்  மாவட்டம், வலங்கைமான் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகக் கட்டடங்களையும் 146 கோடியே 98 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்களையும் காணொலிக் காட்சி மூலமாக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி திறந்து வைத்தார்,   நபார்டு கடனுதவி திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகக் கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் நேற்று காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்கள்.

மேலும், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி நாகப்பட்டினம், நாமக்கல்,  திருவள்ளூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 28 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 46 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், குடிநீர் வசதிகள், கழிவறைகள் மற்றும் சுற்றுச்சுவர்; சென்னை - சைதாப்பேட்டையில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆசிரியர் இல்லத்திற்கான கூடுதல் கட்டடம்; அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் சென்னை, கடலூர், திண்டுக்கல்,  ஈரோடு, நாகப்பட்டினம், நாமக்கல், இராமநாதபுரம், திருப்பூர்,  திருவள்ளுர், திருவண்ணாமலை, வேலூர்,  விழுப்புரம், மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 58 அரசு உயர்நிலைப்  பள்ளிகளில்  97 கோடியே 81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்கள்; என மொத்தம், 149 கோடியே 58 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் காணொலி காட்சிமூலம் நேற்று திறந்து வைத்தார்கள்.

காவலர் பாளையம் சென்னை தலைமைச் செயலகத்தில், உள்துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் 1 கோடியே 83 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமையலறைக்கூடத்துடன் கூடிய காவலர்களுக்கான பாளையத்தையும் (ஙிணீக்ஷீக்ஷீணீநீளீs), 6 கோடியே 38 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 23 காவலர் குடியிருப்புகள், 5 காவல் நிலையங்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் 4-ஆம் அணிக்கான பாளையம் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் கோட்ட அலுவலகம் ஆகியவற்றையும் காணொலிக் காட்சி மூலமாகதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் நேற்று திறந்து வைத்தார்கள்.

காவலர் குடியிருப்புகள் திருவாரூர் மாவட்டம் - குடவாசலில் 11 குடியிருப்புகள், திருநெல்வேலி மாவட்டம் - திருவேங்கடத்தில் 12 குடியிருப்புகள், என 1 கோடியே 91 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 23 காவலர் குடியிருப்புகள்; கடலூர் மாவட்டம் -  நெய்வேலி நகரம்,  வேலூர் மாவட்டம் - அணைக்கட்டு, விழுப்புரம் மாவட்டம்  - வானூர் மற்றும் நல்லாண் பிள்ளை பெற்றாள், காஞ்சிபுரம் மாவட்டம் - காஞ்சிபுரம் தாலுகா ஆகிய இடங்களில் 3 கோடியே 12 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 காவல் நிலையங்கள்; கோயம்புத்தூர் மாவட்டம் - கோவைப்புதூரில் 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் 4-ஆம் அணிக்கான பாளையம்;
திருவண்ணாமலை மாவட்டம் - வெங்கிகல்லில் 54 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் கோட்ட அலுவலகக் கட்டடம்; என மொத்தம், 8 கோடியே 22 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல் துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் நேற்று திறந்து வைத்தார்கள்.

சிறைத்துறையில் பணி நியமனம் உதவி சிறை அலுவலர் பணியிடத்திற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தெரிவு செய்யப்பட்ட 83 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 7 நபர்களுக்கு  தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் நேற்று பணிநியமன ஆணைகளை வழங்கினார்கள். இந்நிகழ்வுகளில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள், மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Label