OUR CLIENTS
அம்மா இருசக்கர வாகன திட்டம் மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதல் மானியம் கோரி வழக்கு
அம்மா இருசக்கர வாகன திட்டம் மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதல் மானியம் கோரி வழக்கு Posted on 21-Feb-2018 அம்மா இருசக்கர வாகன திட்டம் மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதல் மானியம் கோரி வழக்கு

சென்னை, பிப்.21-
அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு 75 சதவீத கூடுதல் மானியம் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் பாதுகாப்பு சங்கப் பொதுச்செயலாளர் நம்புராஜன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். மனுவில், பெண்களுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் மானியம் தர வேண்டும் என்றும் 4 சதவீத இடஒதுக்கீட்டில் 4000 மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் தர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதயைடுத்து மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Label