OUR CLIENTS
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் டெல்லி தலைமை செயலாளரை தாக்கியதாக புகார்
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் டெல்லி தலைமை செயலாளரை தாக்கியதாக புகார் Posted on 21-Feb-2018 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள்  டெல்லி தலைமை செயலாளரை தாக்கியதாக புகார்

புதுடெல்லி, பிப்.21-
டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் தலைமைச் செயலாளரை தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு தலைமை செயலாளராக இருப்பவர் அன்ஷு பிரகாஷ். அரசாங்கத்தின் விளம்பர செலவு அதிகரித்து வருவது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு முதல்வர் கெஜ்ரிவால் வீட்டில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது தலைமைச் செயலாளருக்கும், எம்.எல். ஏ.க்களுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. 

இந்த பிரச்சினையைத் தொடர்ந்து அங்கிருந்து நேராக கவர்னர் மாளிகைக்குச் சென்ற தலைமை செயலாளர், கவர்னர் அனில் பைஜா லிடம் புகார் கொடுத் துள்ளார். அதில்  பிரகாஷ் ஜர்வால் மற்றும் அமானத்துல்லா கான் ஆகிய எம்.எல்.ஏ.க்கள் தன்னை தாக்கியதா கவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.  ஆனால் இந்த குற்றச்சாட்டை ஆம் ஆத்மி கட்சி மறுத்துள்ளது.  இதுதொடர்பாக ஆம் ஆத்மி வெளியிட்ட செய்தியில், ‘எம்.எல்.ஏ.க்களின் கேள் விகளுக்கு தலைமைச் செயலாளர் பதில் அளிக்க மறுத்ததுடன், ஆளுநர் கேட்டால் மட்டுமே பதில் அளிப்பேன் என்று கூறினார். எம்.எல்.ஏ.க்களை கெட்ட வார்த்தைகளால் திட்டிவிட்டு சென்றார். இப்போது பா.ஜ.க.வின் தூண்டு தலின் பேரில் எங்கள் மீது குற்றம்சாட்டுகிறார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 2015-ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்ததில் இரு ந்து கட்சிக்கும் அரசு உயர் அதிகாரிகளுக்குமிடையே அதிகாரப் போட்டி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது

Label