OUR CLIENTS
கண் அசைவு நடிகை மீதான வழக்குகளுக்கு தடை விதிக்கப்படுமா? உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
கண் அசைவு நடிகை மீதான வழக்குகளுக்கு தடை விதிக்கப்படுமா? உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை Posted on 21-Feb-2018 கண் அசைவு நடிகை மீதான வழக்குகளுக்கு தடை விதிக்கப்படுமா?  உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

புதுடெல்லி, பிப்.21-
கண் அசைவு நடிகை பிரியா வாரியர் மீதான எப்.ஐ.ஆரை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உச்ச நீதிமன்றத்தில்  இன்று விசாரணை நடத்த உள்ளது.

மலையாள நடிகை பிரியா வாரியர் தனது கண் அசைவால் ஒரே நாளில் நாடுமுழுவதும் இளைஞர்களை கவர்ந்து விட்டார். அவர் நடித்த ‘ஒரு அடார் லவ்’ மலையாள படத்தில் இடம்பெற்ற ‘‘மாணிக்ய மலராய பூவி’’ பாடல் சமீபத்தில் வெளியானது. அதில் பிரியா வாரியரின் கண் அசைவுகளும் காதலனைப் பார்த்து கண் சிமிட்டுவதும் இளைஞர்களை சுண்டி இழுப்பதாக அமைந் துள்ளது.  அகில இந்திய அளவில் பரபரப்பாக பேசவைத்த பிரியா வாரி யரின் கண் சிமிட்டும் காதல் பாடலை எதிர்த்து தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிரா  மாநில காவல்நிலையங் களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

இந்த பாடல் முகம்மது நபி மற்றும் அவரது மனைவியார் தொடர்பான உணர்வுகளை காயப்படுத்துவதாகவும், இதன் மூலம் இஸ்லாமியர்களின் மத
உணர்வை புண்படுத்து வதாக கூறி பிரியா வாரியர், இயக்குனர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
இவ்வாறு அடுக்கடுக் காக வழக்குகள் பதிவு செய் வதை தடுக்கக் கோரி பிரியா வாரியர் சார்பில்உச்ச நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் நேற்று முன்தினம் மனுதாக்கல் செய்தார். மேலும் இந்த மனுவை அவசர வழக் காக விசாரிக்க வேண் டும்  என்றும் வழக்கறி ஞர் கேட்டுக் கொண் டார். இதையடுத்து இவ்வழக்கை நாளை விசாரிப்பதாக  உச்சநீதி மன்றம் கூறியுள்ளது.

கடந்த 40 ஆண்டுகளாக மிகப்பிரபலமாக புழக்கத் தில் உள்ள பலரது மனதைக் கவர்ந்த இந்த பாடலால் முஸ்லிம் சமுதாயத்தினரின் மதஉணர்வுகள் காயப் படுவதாக தற்போது சுமத்தப்படும் குற்றச்சாட்டு ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல என்றும் அடிப்படை ஆதாரமற்றது என்றும் பிரியா வாரியரின் மனு வில் கூறப்பட்டுள்ளது.

‘இந்த பாடலின் வரிகளை சரியாக புரிந்து கொள்ள முடியாதவர்கள் பிரியா வாரியர் மீது காவல் நிலையங்களில் குற்ற வழக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இந்த பாடல் தொடர்பாக காவல் நிலையங்களில் கிரிமினல் வழக்குகளில் பதிவு செய்யப்படுவதை இந்த நீதிமன்றம் தடுக்க வேண்டும். சில மாநிலங்களில் உள்ள காவல் நிலையங்களில் பிரியா வாரியருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து முதல் தகவல் அறிக்கைகளையும் ரத்து செய்ய வேண்டும்’ என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Label