OUR CLIENTS
பீகாரில் 10-ம் வகுப்பு தேர்வில் ஷூ, சாக்ஸ் அணிய தடை
பீகாரில் 10-ம் வகுப்பு தேர்வில் ஷூ, சாக்ஸ் அணிய தடை Posted on 21-Feb-2018 பீகாரில் 10-ம் வகுப்பு தேர்வில் ஷூ, சாக்ஸ் அணிய தடை

பாட்னா, பிப்.21-
பீகாரில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ- மாணவிகள் ஷூ, சாக்ஸ் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. காப்பி அடிப்படை தடுக்க மாநில பள்ளி கல்வி வாரியம் நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது.

 பீகார் மாநிலத்தில் சமீப காலங்களில் நடந்த அரசு பொதுத்தேர்வில் பல்வேறு வகையான மோசடிகள் நடந்தது.  இதனால் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம்- பா.ஜனதா கூட்டணி அரசு மோசடிகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.

இந்நிலையில் பீகாரில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ- மாணவிகள் ஷூ மற்றும் சாக்ஸ் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. காப்பி அடிப்படை தடுக்க இந்த நடவடிக்கையை மாநில பள்ளி கல்வி வாரியம் மேற்கொண்டு உள்ளது. தேர்வு எழுத வரும் மாணவ- மாணவிகள் செருப்பு மட்டுமே அணிந்து வர வேண்டும் என்று பள்ளி கல்வி வாரியம் அனுப்பியுள்ள உத்தரவில் தெரிவித்துள்ளது.

பீகாரில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று  (21-ந்தேதி) நடக்கிறது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 17 லட்சம் மாணவ- மாணவிகள் எழுதுகிறார்கள். 1426 தேர்வு மையங்கள் உள்ளன. அங்கு சமீபத்தில் நடந்த இடைநிலை தேர்வில் புதிய விதிமுறைப்படி மோசடியில் ஈடுபட்ட 985 மாணவிகள் நீக்கம் செய்யப்பட்டனர். 25 பேர் கைதாகி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Label