OUR CLIENTS
பஞ்சாப் நே‌ஷனல் வங்கி மீது நிரவ்மோடி பாய்ச்சல்
பஞ்சாப் நே‌ஷனல் வங்கி மீது நிரவ்மோடி பாய்ச்சல் Posted on 21-Feb-2018 பஞ்சாப் நே‌ஷனல் வங்கி மீது நிரவ்மோடி பாய்ச்சல்

மும்பை, பிப்.21-
வாங்கிய கடனை திருப்பி செலுத்தும் தகுதி இருந்தும் பஞ்சாப் நேஷனல் வங்கி அவசரப்பட்டு எங்களை சிக்க வைத்துவிட்டனர் என்று நிரவ் மோடி கடிதம் மூலம் கூறியுள்ளார்.

 பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.11500 கோடி மோசடி செய்த வைர வியாபாரி நிரவ்மோடி வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். அவரை பிடிக்க சி.பி.ஐ. சர்வதேச போலீஸ் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறது.  அவருடைய இந்திய நிறுவனங்களில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ரூ.5 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் கடந்த 13ம் தேதியும், 15ம் தேதியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கிக்கு நிரவ்மோடி கடிதங்கள் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-  பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் நான் வாங்கியுள்ள கடன்களில் மதிப்பு ரூ.5 ஆயிரம் கோடிக்கும் குறைவானதே ஆகும். ஆனால் ரூ.11 ஆயிரம் கோடிக்கு மேல் மோசடி செய்துவிட்டதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே எங் கள் நிறுவனம் மூலம் ரூ.6500 கோடி அளவுக்கு வர்த்தகம் நடத்தப்பட்டு வருகிறது. வங்கியிலும் குறிப்பிட்ட அடமானங்களை கொடுத்திருக்கிறோம். நாங்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்தும் சக்தியுடனும் இருக்கிறோம்.  ஆனாலும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கி அவசரப்பட்டு ஒருவித பயத்துடன் எங்கள் மீது புகார் கொடுத்துள்ளனர். எங்களை தேவையில்லாமல் சிக்க வைத்துவிட்டனர். இதன்மூலம் எங்களுடைய நிறுவனங்கள் தொழில் செய்ய முடியாமல் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளது.

இந்த கடனில் சம்பந்தப்படாத எங்கள் நிறுவனங்களையும் இதில் இழுத்துவிட்டுள்ளனர். சர்வதேச அளவில் செயல்படும் எங்கள் நிறுவனங்களுக்கும் கடனுக்கும் சம்பந்தம் இல்லை. அதையும் இதில் சேர்த்து புகார் கூறியிருக்கிறார்கள்.  பஞ்சாப் நே‌ஷனல் வங்கி அவசரப்படாமல் முறையாக அணுகி இருந்தால் எங்களிடமிருந்து கடன் வசூலித்து இருக்கலாம். இப்போது எங்கள் தொழிலை கடுமையாக பாதிக்க செய்துவிட்டதால் பணத்தை வசூலிக்க செய்ய முடியாத நிலையை அவர்களே ஏற்படுத்தி இருக்கிறார்கள்.  இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

நாங்கள் எந்த மோசடியிலும் ஈடு படவில்லை. உரிய முறையில் தான் கடன்களை பெற்றிருக்கிறோம். அதற் கான உத்தரவாதங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தொழிலில் எனது மனைவியோ, எனது உறவினரோ சம்பந்தப்படவே இல்லை. அவர்கள் மீதும் புகார் கொடுத்துள்ளனர்.  நாங்கள் பல வங்கிகளிலும் கடன் வாங்கி தொழில் செய்து வருகிறோம். எல்லா வங்கிகளுக்கும் உரிய பாதுகாப்பையும் உத்தரவாதத்தையும் நாங்கள் வழங்கி இருக்கிறோம். சர்வதேச அளவிலும் நாங்கள் கடன் பெற்றுதான் தொழில் செய்கிறோம். அங்கும் அந்த உத்தரவாதங்கள் வழங்கப்பட்டுள்ளன. எங்களுக்கு வங்கிகள் உரிய முறையில் ஆதரவாக இருந்தால் பணத்தை திரும்ப செலுத்த முடியும்.  இந்தியாவில் எங்கள் நிறுவனங்களில் 2500 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு முடக்கப்பட்ட பணத்தை எடுப்பதற்கு உதவ வேண்டும்.

Label