OUR CLIENTS
திடீரென்று சரிந்து விழுந்த இரும்பு ஆங்கிள்கள் இடிபாடுகளில் சிக்கிய இளைஞர் படுகாயம்!
திடீரென்று சரிந்து விழுந்த இரும்பு ஆங்கிள்கள் இடிபாடுகளில் சிக்கிய இளைஞர் படுகாயம்! Posted on 21-Feb-2018 திடீரென்று சரிந்து விழுந்த  இரும்பு ஆங்கிள்கள் இடிபாடுகளில் சிக்கிய இளைஞர் படுகாயம்!

பூவிருந்தவல்லி, பிப்.21-
திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லியில் வண்டலூருக்கும்&மீஞ்சூருக்கும் இடையில் உள்ள பைபாஸ் சாலையில் நேற்று திடீரென்று பாலத்தில் இருந்த இரும்பு ஆங்கிள்கள் சரிந்து விழுந்தன. இதில் இடிபாடுகளில் சிக்கிய இளைஞர் படுகாயம் அடைந்தார்.

திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லியில் புதிய பைபாஸ் சாலையில் பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த சாலை வண்டலூருக்கும்&மீஞ்சூருக்கும் இடையில் அமைந்துள்ளது. பயண நேரம் குறைய இந்த வழியை பயன்படுத்தலாம் என்று திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் இந்த பாலம் கட்டும் பணியில் வடநாட்டு இளைஞர்கள் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஜாக்கி, காலம் பயன்படுத்தி பாலம் ராட்சத அளவில் கட்டப்பட்டு வந்தது. இதற்கிடையே நேற்று அந்த பாலத்தில் பொருத்தப்பட்டிருந்த ஆங்கிள்களை இளைஞர் அப்புறப்படுத்த முயற்சி செய்தார். இதற்காக ஒரு ஆங்கிளை மட்டும் ஸ்பேனர் கொண்டு கழற்றினாராம். ஆனால் அந்த பாலத்தில் பொருத்தப்பட்டிருந்த ஆங்கிள்கள் வரிசையாக சரிய ஆரம்பித்தது. இதை அந்த இளைஞரால் கட்டுப்படுத்த முடியவில்லை. 

திடீரென அந்த இடிபாடுகளில் சிக்கிய அந்த இளைஞர் உயிருக்காக போராடினார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பூவிருந்தவல்லி காவல் ஆய்வாளர் விஜயன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இடிபாடுகளில் சிக்கிய இளைஞரை மீட்டார். பின்னர் அந்த இளைஞரை  பூவிருந்தவல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். வடநாட்டு இளைஞர்களை பாலம் கட்டும் பணி, கட்டடம் கட்டும் பணி, ஹோட்டல்கள், மின்துறை, ரயில்வே துறை என்று அனைத்திலும் பணியில் தினக்கூலிகளாக நியமனம் செய்து வைத்து கொள்கின்றனர். இவர்கள் 3 வேளை உணவு கொடுத்தால் போதும் எந்த பணியாக இருந்தாலும் செய்து முடித்து விடுகின்றனர். இவர்களை போன்றே ஆந்திர மாநிலத்தில் இருந்து பணிக்கு வரும் தொழிலாளர்களும் பணம் கொடுத்து விட்டு 3 வேளை உணவு வழங்கினால் போதும் வேலை செய்து கொடுக்க காத்திருக்கின்றனர். 

நிலைமை இப்படி மாறவே காரணம் பணம் தமிழகத்தில் தாராளமாக புழக்கத்தில் இருப்பதாக வடநாட்டு இளைஞர்கள் கருதுகின்றனர். எது கேட்டாலும் ஒப்பந்ததாரர்கள் வாங்கி தருவதே இங்கு அதிகம் வடநாட்டு இளைஞர்கள் வேலைக்கு வந்து குவிகின்றனர். இப்படி பாலம் சரிந்து விழுந்தாலும் சரி பணிக்கு தவறாமல் ஆஜராகி விடுகின்றனர். காட்டுவாசிகள் போன்று வேலைகளை செய்வதால் இவர்களை கட்டட ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க மறுப்பு தெரிவிக்கின்றனர். 

இவர்கள் இறந்தால் கூட பிரச்னை இல்லாமல் கொடுக்கும் பணத்தை வாங்கி கொண்டு இறந்தவர் உடலை வாங்கிச் சென்று விடுகிறார்களாம். இதனாலேயே இவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தங்குவதற்கு கூட கூடாரங்களில் தங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால் செலவு மிச்சமாகிறது. உயிரை பணயம் வைத்து பணியாற்றுவதில் இவர்கள் கில்லாடிகளாக விளங்குவதே இதற்கெல்லாம் காரணம் என்று கூறுகின்றனர் ஒப்பந்ததாரர்கள். உள்ளூர் இளைஞர்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால் பெரியளவில் ஊதி பெரிதாக்கி விடுவார்கள் என்று ஒப்பந்ததாரர்கள் அஞ்சி நடுங்குகின்றனர். இதுவே வடநாட்டு இளைஞர்கள் வேலைக்கு சேரும் ரகசியம் அடங்கி இருக்கிறது. எது எப்படியோ துணையின்றி இளைஞர் ஒருவர் அவ்வளவு பெரிய பாலத்தின் சென்ட்ரிங் பொருட்களை அப்புறப்படுத்த நியமிக்கப்பட்டது எவ்வகையில் நியாயம் என்ற கேள்வி மட்டும் அனைவரது மனதிலும் எழாமல் இல்லை. ஒப்பந்தாரர் மீது இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். காவல் துறை என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label