OUR CLIENTS
மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் மாநிலச் செயலாளராக கே.பாலகிருஷ்ணன் தேர்வு!
மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் மாநிலச் செயலாளராக கே.பாலகிருஷ்ணன் தேர்வு! Posted on 21-Feb-2018 மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் மாநிலச்  செயலாளராக கே.பாலகிருஷ்ணன் தேர்வு!

தூத்துக்குடி, பிப்.21-
மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக கே.பாலகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22-வது மாநில மாநாடு பிப்ரவரி 17&-20 ஆகிய தேதிகளில் தூத்துக்குடியில் நடை பெற்றது. சீத்தாராம் யெச்சூரி, பிரகாஷ் காரத், ஜி.ராமகிருஷ்ணன், என். சங்கரய்யா ஆகியோர் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். நிறைவு நாளான நேற்று 80 பேர் கொண்ட மாநிலக்குழுவிற்கு 79 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் கட்சியின் மாநிலச் செயலாளராக கே.பாலகிருஷ்ணன் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். 

கே.பாலகிருஷ்ணன் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்த போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 1970-ம் ஆண்டில் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர்கள் உரிமைகளுக்கான போராட்டத்தில் முன்ன ணியில் நின்றவர். 1973-ம் ஆண்டு இந்திய மாணவர் சங்கத்தின் முதல் மாநில மாநாட்டில் மாநிலத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு திறம்பட செயலாற்றியவர்.

தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில  மாவட்ட பொறுப்புகளில் பணியாற்றியதைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தின் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர், மாநிலக்குழு உறுப்பினர், மாநில செயற்குழு உறுப்பினர், மத்தியக்குழு உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினராக 2011-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட பாலகிரு ஷ்ணன் சட்டப்பேரவையில் கட்சியின் கொறடாகவும் செயல்பட்டார்.

கே.பாலகிருஷ்ணனின் மனைவி பா. ஜான்சிராணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும் செயல் பட்டு வருகிறார். முன் னதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக ஜி.ராமகிருஷ்ணன் பொறுப் பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Label