OUR CLIENTS
ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு முன்னாள் டிஜிபி ராமானுஜம் ஆஜர்
ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு முன்னாள் டிஜிபி ராமானுஜம் ஆஜர் Posted on 22-Feb-2018 ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு முன்னாள்  டிஜிபி ராமானுஜம் ஆஜர்

ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு முன்னாள்  டிஜிபி ராமானுஜம் ஆஜர்
 
சென்னை, பிப்.22-

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு, முன்னாள் டிஜிபி ராமானுஜம் ஆஜராகி, தனது விளக்கத்தினை அளித்தார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பில் மர்மம் இருப்பதாக எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து, அவரது மறைவு குறித்து ஓய்வுப்பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த விசாரணை ஆணையத்தில் இதுவரை பல்வேறு தரப்பினரும் விசாரணைக்காக ஆஜராகியுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு, முன்னாள் டிஜிபி ராமானுஜம் நேரில் ஆஜராகி, தனது விளக்கத்தினை அளித்தார். விசாரணை முடிந்த பின்னர் வெளியே வந்த அவர், செய்தியாளர்கள் சந்திப்பை தவிற்த்து, புறப்பட்டுச் சென்றார்.

Label