OUR CLIENTS
நீட் தேர்வுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் Posted on 22-Feb-2018 நீட் தேர்வுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் கோரி

கண்டன ஆர்ப்பாட்டம்

 
காஞ்சிபுரம், பிப்.22-
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு குடியரசு தலைவர் விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கோரி காஞ்சிபுரத்தில் 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் செய்தனர். 

காஞ்சிபுரத்தில் சமூக நீதி பாதுகாப்புக்கான பேரவை அனைத்து மாணவர் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் மருத்துவத்திற்கான நீட் தேர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தி.மு.க. மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் அபுசாலி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க.,விடுதலை சிறுத்தைகள் கட்சி, அகில இந்திய கிராமபுற மாணவர் சங்கம், முஸ்லிம் மாணவர் பேரவை, முற்போக்கு மாணவர் இயக்கம், உள்ளிட்ட பல்வேறு   மாணவர் அமைப்புகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக சட்டமன்றத்தில் ஒரு மித்த கருத்துடன், அனைத்து கட்சிகளும் கொண்டு வந்த நீட் எதிர்ப்பு தீர்மானத்திற்கு, மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும்,  பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் இந்த தேர்வால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அதனால், மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு குடியரசு தலைவர் உடனடி விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.  

Label