OUR CLIENTS
டிடிவி தினகரனுடன், அதிமுக எம்.எல்.ஏ பிரபு திடீர் சந்திப்பு சிக்கலில் எடப்பாடி பழனிசாமி அரசு
டிடிவி தினகரனுடன், அதிமுக எம்.எல்.ஏ பிரபு திடீர் சந்திப்பு சிக்கலில் எடப்பாடி பழனிசாமி அரசு Posted on 23-Feb-2018 டிடிவி தினகரனுடன், அதிமுக எம்.எல்.ஏ பிரபு திடீர் சந்திப்பு  சிக்கலில் எடப்பாடி பழனிசாமி அரசு

டிடிவி தினகரனுடன், அதிமுக எம்.எல். பிரபு திடீர் சந்திப்பு

 சிக்கலில் எடப்பாடி பழனிசாமி அரசு

சென்னை, பிப்.23-

முதல்வரின் ஆதரவாளரான கள்ளக்குறிச்சி .தி.மு.. எம்.எல்.. பிரபு திடீரென அணி மாறினார். அவர், ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் தொடர்ந்து ஏற்பட்டு வந்த குழப்பத்தை தொடர்ந்து, சசிகலா மற்றும் தினகரன் தரப்பை ஒதுக்கி வைத்துவிட்டு கட்சியை வழிநடத்த முதல்வர் மற்றும் துணை முதல்வர் தரப்பு முடிவெடுத்தது. இதனை தொடர்ந்து பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்தும், துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து சசிகலாவும், தினகரனும் நீக்கப்பட்டனர். அதே நேரம் தினகரனுக்கு 21 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவும் தெரிவித்திருந்தனர்.

சமீபத்தில் முதல்வரை மாற்றவேண்டும் என 18 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநரிடம் மனு அளிக்க, அவர்களை சபாநாயகர் தனபால் ஆட்சிக்கு எதிராக செயல்படுவதாக கூறி தகுதி நீக்கம் செய்திருந்தார். இதை எதிர்த்த வழக்கும் உயர்நீதிமன்றத்தில் தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட சூழலில் இன்று காலை டிடிவி தினகரனுடன்முதல்வரின் ஆதரவாளரான கள்ளக்குறிச்சி தொகுதி .தி.மு.. எம்.எல்.. பிரபு,  சென்னையில் இன்று டிடிவி தினகரனை சந்தித்து பேசினார்.  அப்போது அவர் டிடிவி தினகரனுக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-  தமிழகத்தை வழிநடத்துவதற்கு மக்கள் ஆதரவு பெற்ற டி.டி.வி. தினகரன் பின்னால் செல்ல வேண்டும். அதனால் அவருக்கு ஆதரவு அளித்துள்ளேன். மக்கள் ஆதரவு டிடிவி தினகரனுக்கு உள்ளது என்பது ஆர்.கே. நகர் தேர்தலிலேயே தெரிந்தது.

தற்போது அ.தி.மு.க.வில் இருந்து மக்கள் சேவையை சரிவர செய்ய முடியவில்லை. எம்.எல்.ஏ. பணியை செய்வதற்கு மாவட்டத்திலேயே பல முட்டுக்கட்டைகள் போடப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் என்ன பிரச்சனை என்பது முதல்வருக்கே தெரியும். கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டத்தை உருவாக்கி தர வேண்டும். எனக்கும் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கும் இடையே எந்த பிரச்சினையும் இல்லை.

கட்சி பிரிந்தபோது டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த 18 பேரில் யாராவது ஒருவர் முதல்வர் ஆவதற்கு  வாய்ப்பு உள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்

அதிமுக எம்.எல். பிரபு சந்தித்து பேசி வருவதை தொடர்ந்து, தினகரன் ஆதரவு உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேநேரம் கூட்டணி எம்.எல்.ஏவாக கருணாஸ் தொடர்ந்து தினகரனுக்கு ஆதரவு அளித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Label