OUR CLIENTS
மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலாளர் பாலகிருஷ்ணனுக்கு, திருமாவளவன் நேரில் வாழ்த்து
மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலாளர் பாலகிருஷ்ணனுக்கு, திருமாவளவன் நேரில் வாழ்த்து Posted on 23-Feb-2018 மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலாளர் பாலகிருஷ்ணனுக்கு, திருமாவளவன் நேரில் வாழ்த்து

சென்னை, பிப்.23-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டுள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. பாலகிருஷ்ணனுக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
சென்னையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் அலுவலகத்திற்கு இன்று காலை சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. பாலகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது அங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான டி.கே ரங்கராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர்.

Label