OUR CLIENTS
உலகளாவிய வர்த்தகத்துக்கு தயார் நிலையில் இந்தியா
உலகளாவிய வர்த்தகத்துக்கு தயார் நிலையில் இந்தியா Posted on 28-Feb-2018 உலகளாவிய வர்த்தகத்துக்கு தயார் நிலையில் இந்தியா

புதுடெல்லி, பிப்.28-
உலகளாவிய வர்த்தகத்திற்கு இந்தியா தயாராக உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி நேற்று இந்தியா - கொரியா வர்த்தக மாநாட்டில் அறிவித்தார்.

புதுடில்லியில் நேற்று இந்தியா& கொரியா வர்த்தக மாநாடு துவங்கியது. இந்த மாநாட்டில் கொரியாவை சேர்ந்த பல வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். பிரதமர் நரேந்திர மோடி மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். அதன் விவரம்

உலக நிறுவனங்கள் இந்தியாவில் வர்த்தகம் மேற்கொள்ள சுமூகமான சூழலை உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. வர்த்தகம் தொடர்பான முடிவெடுப்பதில் உள்ள இழுப்பறி நிலை நீக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் நம்பகத்தன்மையை விரிவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இறக்குமதி அடிப்படையில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக விளங்குகிறது. விரைவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தின் அடிப்படையில் இந்தியா உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக உருவாகும்.

இன்று உலகின் வேகமாக வளரந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா விளங்குகிறது. மேலும் உலகில் மிக பெரிய அளவிலான தொழில் முனைவோர்கள் கொண்ட நாடாகவும் இந்தியா திகழ்கிறது.

உலக நாடுகளில் வெகு சிலவற்றில் மட்டும்தான் பொருளாதாரத்தின் மூன்று முக்கிய அம்சங்களான ஜனநாயகம், திறனுள்ள தொழிலாளர்கள்  மற்றும் உற்பத்திப் பொருள்களுக்கான தேவைகள் ஆகிய அனைத்தையும் ஒன்றாக பார்க்க முடியும். இந்தியாவில் அந்த மூன்று அம்சங்களும் உள்ளன.

தற்போது இந்தியா உலகளவிலான வர்த்தகத்திற்கு தயாராக உள்ளது. உலக முதலீட்டாளர்களின் தேவைகள் மற்றும் அவர்களின் முதலீட்டுக்கான பாதுகாப்பு ஆகியவற்றை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

மேலும் இந்தியாவில் வர்த்தக முதலீட்டுக்கு தடையாக இருக்கும் பழைய விதிமுறைகளை நீக்கி சீர்திருத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மோடி தெரிவித்தார். உதாரணமாக இந்தியாவில் தொழிற்சாலை நடத்துவதற்கான காலத்தை 3 ஆண்டுகளில் இருந்து 15 ஆண்டுகளுக்கு மேலாக உயர்த்தப் பட்டுள்ளதை மோடி சுட்டிக்காட்டினார்.
 

Label