OUR CLIENTS
ரூ.3,110 கோடி மதிப்பீட்டில் எரிபொருள் மேம்பாட்டு திட்டம்
ரூ.3,110 கோடி மதிப்பீட்டில் எரிபொருள் மேம்பாட்டு திட்டம் Posted on 28-Feb-2018 ரூ.3,110 கோடி மதிப்பீட்டில் எரிபொருள் மேம்பாட்டு திட்டம்

சென்னை, பிப்.28-
சென்னை - மணலியில் உள்ள பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட் (சிபிசிஎல்) நிறுவனத்தின் எண்ணெய் சுத்திரிகரிப்பு நிலையத்தில் 3,110 கோடி ரூபாய் செலவிலான எண்ணெய் கசடை மேம்படுத்தி கச்சா எண்ணெயில் சேர்த்து மறு சுழற்சி செய்யும் திட்டத்தை நேற்று மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் துவக்கி வைத்தார்.

சென்னை பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் சென்னை அருகே மணலி மற்றும் நாகப்பட்டினம் அருகே பனங்குடி ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. இங்கு ஆண்டுக்கு 1.5 மெட்ரிக் டன் எண்ணெய் சுத்திகரிக்கப்படுகிறது. தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சியில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்நிலையில் சென்னையில் உள்ள மணலி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ரூ.3,110 கோடி முதலீட்டில் எண்ணெய் கசடை மேம்படுத்தி டீசல், நாப்தா, எல்பிஜி எரிவாயு போன்றவற்றை தயாரிக்க திட்டமிடப்பட்டது.
அதை தொடர்ந்து நேற்று சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அந்த திட்டத்தை துவக்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்த திட்டம், எரிபொருள் எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கும். மேலும் கச்சா எண்ணெயில் கந்தக சதவிகிதத்தை அதிகரிக்கும், சுத்திகரிப்புக்கான கச்சா எண்ணெய் செலவும் குறையும் என சுத்திகரிப்பு நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும், முதல்வர் எடப்பாடி கே பழனிசாமியை, மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமைச் செயலகத்தில் நேற்று சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு  வரும் திட்டங்கள் குறித்தும், தொழில் வளர்ச்சியையும், முதலீட்டையும் மேலும் ஊக்குவிக்கும் புதிய திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

Label