OUR CLIENTS
பெட்ரோல், டீசல் விலை சரிவு: பஸ் கட்டணத்தை குறைத்து ஒடிசா அரசு உத்தரவு
பெட்ரோல், டீசல் விலை சரிவு: பஸ் கட்டணத்தை குறைத்து ஒடிசா அரசு உத்தரவு Posted on 17-Aug-2016 பெட்ரோல், டீசல் விலை சரிவு: பஸ் கட்டணத்தை குறைத்து ஒடிசா அரசு உத்தரவு

புவனேஸ்வர்:
எரிபொருளின் விலைகளை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து கொள்ளும் வகையில் மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பையடுத்து, மாதத்தின் 15 மற்றும் 30,31 தேதிகளில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகள் உயர்த்தியும், குறைத்தும் அறிவிக்கப்படுகின்றன.


ஒடிசா மாநிலத்தில் தனியார் பஸ் உரிமையாளர்களின் வேண்டுகோளின்படி, மாநில அரசு ஒரு கொள்கை முடிவை கடந்த ஜூன் மாதம் வெளியிட்டது. இந்த முடிவின்படி, டீசலின் விலை 2 ரூபாய் அளவுக்கு உயர்த்தப்பட்டால், பஸ் கட்டணம் கிலோமீட்டருக்கு ஒருகாசு அளவுக்கு உயர்த்தியும், 2 ரூபாய் அளவுக்கு குறைக்கப்பட்டால், பஸ் கட்டணத்தை கிலோமீட்டருக்கு ஒருகாசு அளவுக்கு குறைத்தும் நிர்ணயித்துக் கொள்ள தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

எண்ணெய் நிறுவனங்கள் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிவிப்பின்படி, பெட்ரோலின் விலை லிட்டருக்கு ஒரு ரூபாயும், டீசலின் விலை லிட்டருக்கு 2 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஒடிசா மாநிலத்தில் இயங்கும் தனியார் பேருந்து டிக்கெட் கட்டணங்களில் மாற்றம் செய்து அம்மாநில வணிகவரி மற்றும் போக்குவரத்து துறை இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, சாதாரண பஸ்களின் டிக்கெட் கட்டணம் கிலோமீட்டருக்கு ஒருகாசு குறைந்து 59 காசுகளுக்கு பதிலாக 58 காசுகளாகவும், எக்ஸ்பிரஸ் பஸ்களின் டிக்கெட் கட்டணம் கிலோமீட்டருக்கு ஒருகாசு குறைந்து 62 காசுகளுக்கு பதிலாக 61 காசுகளாகவும், டீலக்ஸ் பஸ்களின் டிக்கெட் கட்டணம் கிலோமீட்டருக்கு  இரண்டு காசுகள் குறைந்து 82 காசுகளுக்கு பதிலாக 80 காசுகளாகவும், ஏ.சி. பஸ்களின் கட்டணமும் இரண்டு காசுகள் குறைந்து ரூ.1.03-க்கு பதிலாக ரூ.1.01 ஆகவும் நிர்ணயித்து புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Label