OUR CLIENTS
பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்நிறுத்த காங்கிரஸ் முடிவு
பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்நிறுத்த காங்கிரஸ் முடிவு Posted on 28-Feb-2018 பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்நிறுத்த காங்கிரஸ் முடிவு

நாக்பூர், பிப்.28-
பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்நிறுத்துவோம் என காங்கிரஸ் எம்.பி. தெரிவித்துள்ளார்.
மத்தியப்பிரதேசம் மாநிலம், நாக்பூர் நகரில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் பாராளுமன்ற மேல்சபை உறுப்பினர் ராஜீவ் கவுடா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 
மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க. ஆட்சியின்மீது மக்கள் மிகுந்த வெறுப்படைந்துள்ளனர். இந்த அரசு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறி விட்டது. மோடி அரசில் ஊழல் உச்சகட்டத்தில் உள்ளது. நாட்டின் மிகப்பெரிய ஊழலாக ரபேல் போர் விமானம் கொள்முதல் ஒப்பந்தம் தலைதூக்கியுள்ளது. இதற்கு பிரதமர் விளக்கம் அளித்தே தீர வேண்டும்.
குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தலில் ராகுல் காந்தி தலைமையின்கீழ் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இதனால், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளது.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் எங்கள் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்நிறுத்தி காங்கிரஸ் கட்சி அபாரமான வெற்றியை அடையும். இவ்வாறு அவர் கூறினார்.

Label