OUR CLIENTS
வங்கி மோசடிகளை தவிர்க்க - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு தயாராக பொதுத்துறை வங்கிகளுக்கு 15 நாள் கெடு
வங்கி மோசடிகளை தவிர்க்க - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு தயாராக பொதுத்துறை வங்கிகளுக்கு 15 நாள் கெடு Posted on 28-Feb-2018 வங்கி மோசடிகளை தவிர்க்க - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு தயாராக  பொதுத்துறை வங்கிகளுக்கு 15 நாள் கெடு

புதுடெல்லி, பிப்.28-
வங்கிகளில் மோசடிகளை தவிர்க்க 15 நாளில் வங்கி நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தயார் செய்ய வேண்டும். வங்களின் நடைமுறை விதிகளில் மோசடிகளுக்கு இடமளிக்கக் கூடிய குறைபாடுகளை கண்டுபிடிக்க வேண்டும்.
வங்கிகளின் நடைமுறைகளிலும் தொழில்நுட்பங்களிலும் மோசடிகளுக்கு இடம் அளிக்க கூடிய அபாயகரமான பகுதிகளை கண்டறிந்து அவற்றை சீர் செய்ய 15 நாளில் தயாராக வேண்டும் என மத்திய நிதி அமைச்சகத்தின் ஒரு பிரிவான நிதி சேவை பிரிவு சுற்றறிக்கை  அனுப்பியுள்ளது.
அரசு வங்கிகளின் நிர்வாக இயக்குனர் களுக்கும், தலைமை தொழில் நுட்ப அதிகாரிகளுக்கு இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. வங்கியில் நிதி மோசடியை முன்கூட்டியே தடுப்பதற்காக வரைவு செயல் திட்டம் ஒன்றை தயாரிக்கும் படி அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கி நிதி சேவை பிரிவு செயலாளர் ராஜீவ் குமார் டுவிட்டரில் வெளியிட்ட செய்தி ஒன்றில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து குறிப்பிட்டுள்ளார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் மோசடி நாளுக்கு நாள் விரிவடைந்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி மோசடி கண்டுபிடிக்கப்பட்ட போது ரூ.14,400 கோடி மோசடி நடந்திருப்பதாக கூறப்பட்டது. பின்னர் இது 12,700 கோடியாக உயர்ந்தது. இப்பொழுது மோசடி மதிப்பு 200 கோடி டாலரை தாண்டியுள்ளதாக பங்குச் சந்தைக்கு பஞ்சாப் தேசிய வங்கி அளித்த தகவல் கூறுகிறது.
வழக்கமாக ரிசர்வ் வங்கி மூலமாக வங்கிகளுக்கு கட்டளைகள் பிறப்பிக்கப்படும் . இப்பொழுது நிதி அமைச்சகத்தில் இருந்தே நேரடியாக கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மோசடிகளை தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை திட்டத்தை தயாரிக்கும் பொறுப்பு நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகரிகளின் கையில் தரப்பட்டுள்ளது.
இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை திட்டத்தின் அடிப்படையில் வங்கி நிர்வாகத்தில் மூத்த ஊழியர்களில் யாருக்கு என்ன பொறுப்பு, அதனை அமல் செய்வது எப்படி என்று வங்கியின் நிர்வாக போர்டு முடிவு செய்ய வேண்டும் என்றும் ராஜீவ் குமார் தெளிவுபடுத்தியுள்ளார்.    

Label