OUR CLIENTS
ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் - சு.சுவாமி பகீர் தகவல்
ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் - சு.சுவாமி பகீர் தகவல் Posted on 28-Feb-2018 ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் - சு.சுவாமி பகீர் தகவல்


புதுடெல்லி, பிப்.28-
துபாயில் நடிகை ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 
ஊடகங்களுக்கு சுப்பிரமணியன் சுவாமி அளித்த பேட்டி: துபாயில் ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டிருக்கலாம். உடல்நலனில் அக்கறை கொள்ளக் கூடிய ஸ்ரீதேவிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததே இல்லை.
ஒருவேளை ஸ்ரீதேவிக்கு யாரேனும் வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றினார்களா? அதேபோல் குளியல் தொட்டியில் விழுந்து ஒருவர் மரணமடைய வாய்ப்பு இல்லை
குளியல் தொட்டியில் யாரேனும் தள்ளி மூச்சுவிட முடியாதபடி அழுத்தினால்தான் மரணம் ஏற்படும். ஸ்ரீதேவி தங்கியிருந்த ஹோட்டல் அறையின் சிசிடிவி கேமராக்களில் என்ன பதிவாகி உள்ளது. ஸ்ரீதேவி மாரடைப்பால்தான் இறந்தார் என திடீரென மருத்துவர்கள் கூறியது ஏன்? சினிமா நடிகைகளுக்கும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கும் உள்ள தொடர்புகள் குறித்து விசாரிக்க வேண்டும். இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். 

Label