OUR CLIENTS
குறுக்குவழியில் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா முயற்சி - தினகரன் குற்றச்சாட்டு
குறுக்குவழியில் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா முயற்சி - தினகரன் குற்றச்சாட்டு Posted on 28-Feb-2018 குறுக்குவழியில் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா முயற்சி - தினகரன் குற்றச்சாட்டு

 குறுக்குவழியில் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா முயற்சி - தினகரன் குற்றச்சாட்டு


சென்னை, பிப்.28-
தமிழகத்தில் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா கட்சி முயற்சிக்கிறது எனவும் இதற்காக எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் மிரட்டுகிறார்கள் எனவும் தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. அடையாறில் உள்ள தனது இல்லத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:- இன்றைய ஆட்சியாளர்கள் ஜெயலலிதா படத்தை அவசர கதியில் திறந்தது போல, அ.தி.மு.க. தலைமை கழகத்தில் சிலையையும் திறந்து வைத்துள்ளனர். இது பற்றி கேட்டால் எதற்கெடுத்தாலும் பதில் சொல்லும் கோமாளி குமார், கோபப்படுகிறார். சிலையின் முக அமைப்பில் திருத்தம் செய்ய முடியாது. ஸ்தபதி ஒருவரை அப்படி சொல்ல வைத்துள்ளனர். இந்த ஆட்சி போன பின்னர் கட்சி எங்களிடம்தான் வரப்போகிறது. நாங்கள்தான் அங்கு புதிய சிலையை வைக்கப்போகிறோம்.

ஐ.ஐ.டி.யில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் விட்டது தவறுதான். தமிழ்த்தாய் வாழ்த்தை மாணவர்கள் பாடாமல் இருந்தால் அதனை ஒலிபரப்பி இருக்கலாம். பின்னர் கடவுள் வாழ்த்து பாடலை மாணவர்களை பாட சொல்லி இருக்கலாம்.

1967-ல் இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் போராட்டம் வெடித்தது. தமிழக மக்கள் எப்போதுமே எந்த ஒரு வி‌ஷயத்தையும் திணிப்பதை ஏற்று கொள்ள மாட்டார்கள். இப்போது சமஸ்கிருதத்தையும் இந்தியையும் திணிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது.

இது பற்றி விமர்சித்த வைகோவை எச்.ராஜா கோபத்தில் ஒருமையில் பேசுகிறார். தமிழ்நாட்டில் தவறான கலாச்சாரத்தை உருவாக்கப் பார்க்கிறார். எந்த விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வேண்டும்.  இங்கு பெரியார் வளர்த்த சமூக நீதி வேரூன்றி உள்ளது. பா.ஜனதா கால்பதிக்க முடியாது. பெரும்பான்மை சமூகத்தினராக இருப்பவர்கள், சிறுபான்மையினரை சீண்டி பார்க்க நினைக்ககூடாது.

தமிழகத்தில் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா கட்சி முயற்சிக்கிறது. இதற்காக எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் மிரட்டுகிறார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் இதைத்தான் செய்து கொண்டுள்ளனர். ஆனால் தமிழக மக்கள் விழிப்புடன் உள்ளனர். 

ஓ.பன்னீர்செல்வம் இப்போது மீண்டும் முதலமைச்சர் ஆகும் எண்ணத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறார். எடப்பாடி பழனிசாமியோ பதவியை தக்க வைக்க முயற்சிக்கிறார். பிர‌ஷர் குக்கர் சின்னம் எங்களுக்கு கிடைத்ததும், எங்களை எதிர்ப்பவர்களுக்கு பிர‌ஷர் எகிறிவிடும் என்று நான் ஏற்கனவே தெரிவித்து இருந்தேன். இப்போது அமைச்சர்கள் அதுபோன்ற நிலையில் தான் உள்ளனர். கோபத்தில் என்னை அவன்- இவன் என்று பேசுகிறார்கள். 

போக்குவரத்து துறையில் பிரச்சினையை சுமூகமாக தீர்த்து வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர், நடராஜனுக்கு அளிக்கபட்டது போல ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்திருந்தால் அவரை காப்பாற்றி இருக்கலாம் என்று கூறுகிறார். மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறியவர்கள் இப்போது எதை எதையோ சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அமைச்சர்களில் பலர் கீழ்ப்பாக்கத்தில் அனுமதிக்கபட வேண்டிய நிலையிலேயே உள்ளனர். காவிரி பிரச்சினையை பொருத்தவரையில் 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி இருந்தது. அதில் 10 நாட்கள் முடிந்து விட்டது. எனவே அதனை அமைப்பதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டும்.

டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். அதன் பின்னர் தனி கட்சி தொடங்குவதற்கான பணிகள் முடுக்கி விடப்படும். உள்ளாட்சி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலை அப்போது தான் எளிதாக சந்திக்க கூடிய சூழல் ஏற்படும். எதிர்காலத்தில் இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Label