OUR CLIENTS
7 மாதமாக திறக்கப்படாத இலுப்பக்குடி அங்கன்வாடி மையம்!
7 மாதமாக திறக்கப்படாத இலுப்பக்குடி அங்கன்வாடி மையம்! Posted on 28-Feb-2018 7 மாதமாக திறக்கப்படாத  இலுப்பக்குடி அங்கன்வாடி மையம்!

7 மாதமாக திறக்கப்படாத  இலுப்பக்குடி அங்கன்வாடி மையம்!

சிவகங்கை, பிப்.28-
சிவகங்கை அருகே 7 மாதங்களாக திறக்காத அங்கன்வாடி மையத்தில் தினமும் குழந்தைகள் சாப்பிட்டதாக கணக்கு எழுதியுள்ளனர்.

சிவகங்கை அருகே இலுப்பக்குடி அங்கன்வாடி குறுவள மையத்தில் 10 குழந்தைகள் படிக்கின்றனர். இங்கு பணிபுரிந்த ஊழியர் 7 மாதங்களுக்கு முன் மாற்றப்பட்டார். இம்மையத்தை பொன்னாம்பட்டி மைய பொறுப்பாளர் கூடுதலாக கவனித்து வருகிறார். இதனால் மையத்தின் செயல்பாடு கேள்விக்குறியானது. தற்போது. மையத்திற்குரிய அரிசி, சத்துமாவு உள்ளிட்ட பொருட்கள் பணியாளர் ஒருவரின் வீட்டில் இறக்கி வைக்கப்பட்டுள்ளன. இதே போல் மாவட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட மையங்கள் செயல்படாமல் உள்ளன.கிருஷ்ணன், சுப்ரமணியன் கூறியதாவது: ஏழு மாதங்களாக மையத்தை திறக்காமல் கலவை சாதம், சத்து மாவு வழங்கியதாக கணக்கு எழுதியுள்ளனர். 2 மாதங்களுக்கு ஒருமுறை சிலிண்டர் வாங்கியுள்ளனர், என்றனர்.குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அதிகாரி பஞ்சவர்ணம் கூறுகையில், “மையத்தை முறையாக திறக்க நடவடிக்கை  எடுக்கப்படும்,” என்றார்.

Label