OUR CLIENTS
அரசு மருத்துவமனையில் டாக்டர் சில்மிஷம் - இளம்பெண் பரபரப்பு புகார்
அரசு மருத்துவமனையில் டாக்டர் சில்மிஷம் - இளம்பெண் பரபரப்பு புகார் Posted on 28-Feb-2018 அரசு மருத்துவமனையில் டாக்டர் சில்மிஷம் -  இளம்பெண் பரபரப்பு புகார்

அரசு மருத்துவமனையில் டாக்டர் சில்மிஷம்
இளம்பெண் பரபரப்பு புகார்


தூத்துக்குடி, பிப்.28-
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சையின் போது டாக்டர் ஒருவர் அத்துமீறி நடந்ததாக இளம்பெண் புகார் செய்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தைச் சேர்ந்த 21 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், இருதய நோய் தொடர்பாக திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். பின்னர் அங்குள்ள மருத்துவர்கள் அவரை மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து அவர் நேற்று காலை தனது கணவர் மற்றும் தாயாருடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவரை இருதய சிகிச்சை பிரிவு மருத்துவர் பரிசோதனை செய்தார். 

அப்போது, தனியறையில் இளம்பெண்ணிடம் மருத்துவர் அத்துமீறி நடந்து சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் அந்த அறையில் இருந்து வெளியே ஓடிவந்து தனது தாயாரிடம் கூறினார். பின்னர் இதுகுறித்து அவரது தாயார் தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் புகாரை ஏற்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் நேரில் சென்று புகார் செய்தார். இதையடுத்து அவரது புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Label