OUR CLIENTS
தீபா கர்மாகருக்கு கேல் ரத்னா விருது: மத்திய அரசு பரிசீலனை
தீபா கர்மாகருக்கு கேல் ரத்னா விருது: மத்திய அரசு பரிசீலனை Posted on 17-Aug-2016 தீபா கர்மாகருக்கு கேல் ரத்னா விருது: மத்திய அரசு பரிசீலனை

டெல்லி:
ஜிம்னாஸ்டிக் போட்டியில் அசத்தி வரும் இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் ரியோ ஒலிம்பிக்கில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம், ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்கில் தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதிச்சுற்றில் நூலிழையில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார்.


இதனால் அவருக்கு விளையாட்டுத் துறையின் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்குவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. நாளை இறுதி முடிவு எடுக்கப்பட்டு மத்திய அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் கேல் ரத்னா விருதுக்கு துப்பாக்கி சுடும் வீரர் ஜிது ராய் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தீபா கர்மாகரின் விளையாட்டு சாதனையைப் பாராட்டி ஏற்கனவே அவருக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டுத் துறையில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான கேல் ரத்னா விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான விளையாட்டு விருதுகள் தேசிய விளையாட்டு தினத்தன்று நடைபெற உள்ள விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்க உள்ளார்.

Label