OUR CLIENTS
மது விற்பனையில் மாமூல் கேட்டு மிரட்டும் கலால் துறை அதிகாரிகள் : டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் புகார்
மது விற்பனையில் மாமூல் கேட்டு மிரட்டும் கலால் துறை அதிகாரிகள் : டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் புகார் Posted on 28-Feb-2018 மது விற்பனையில் மாமூல் கேட்டு மிரட்டும் கலால் துறை அதிகாரிகள் : டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் புகார்

 தூத்துக்குடியில்,  பிப்.28-

மது விற்பனையில் மாமூல் கேட்டு கலால் துறை அதிகாரிகள் மிரட்டுவதாக டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆட்சியரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், ‘மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் பணியாளர்களிடம் கலால் துறை உயர் அதிகாரிகள் விற்பனை அடிப்படையில் பல ஆயிரம் ரூபாய் மாமூல் பெற்று வருகிறார்கள்.   மாமூல் கொடுக்க மறுப்பவர்கள் மீது பொய்யான குற்றசாட்டை சுமத்தி நடவடிக்கை எடுக்கிறார்கள். இதனால் பணியாளர்கள் கடன் வாங்கி, அதிகாரிகளுக்கு மாமூல் கொடுக்கும் நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் டாஸ்மாக் பணியாளர்களை வற்புறுத்தி மாமூல் வசூல் செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

Label