OUR CLIENTS
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் இன்று காலமானார்
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் இன்று காலமானார் Posted on 28-Feb-2018 காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர்  இன்று காலமானார்

 காஞ்சிபுரம், பிப்.28-

உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் காலமானார்.
உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் காலமானார்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதியாக பொறுப்பு வகித்து வந்தவர் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் (வயது 82). கடந்த மாதம் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து சங்கரமடம் திரும்பிய அவர் ஓய்வு எடுத்து வந்தார்.

இந்நிலையில் சங்கராச்சாரியார் ஜெயேந்திரருக்கு இன்று காலை மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து மடத்திற்குச் சொந்தமான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் தகவல் வெளியானது.   அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார்.

பிறகு, அவரது உடல் சங்கர மடத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இறுதிச்சடங்குக்கு இந்தியா முழுவதிலிமிருந்து பல்வேறு அரசியல் பிரமுகர்கள், ஆன்மிக வாதிகள் வருவார்கள் என்பதால், காஞ்சிபுரத்தில் காவல்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறார்கள்.   காஞ்சிபுரம் சங்கர மடத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பக்தர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

Label