OUR CLIENTS
பெங்களூரை மீட்போம்' பா.ஜ. அமைச்சர்கள் பேரணி
பெங்களூரை மீட்போம்' பா.ஜ. அமைச்சர்கள் பேரணி Posted on 03-Mar-2018 பெங்களூரை மீட்போம்' பா.ஜ. அமைச்சர்கள் பேரணி

பெங்களூர், மார்ச்-

பெங்களூருவில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. இதில் இருந்து பெங்களூரை மீட்போம் என்று பா.ஜ. அமைச்சர்கள் நேற்று பேரணி நடத்தினர். மொத்தம் உள்ள 28 தொகுதிகளிலும் இந்த பேரணி நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

கர்நாடக சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் மாதம் வாக்கில் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தலைநகர்பெங்களூரு நகரில் 28 தொகுதிகள் இருப்பதால் அதில் பா.ஜ. கவனம் செலுத்தி வருகிறது.  பெங்களூரை மீட்போம்என்ற பெயரில் நேற்று  பா.ஜ ஒரு பேரணி நடத்தியது.பசவன குடி யில் உள்ள கவிபுரம்  கங்காதரேஸ்வரர் கோயில் முன்பிருந்து பேரணி புறப்பட்டது. இதை மத்தியஅமைச்சர்பிரகாஷ் ஜவடேகர் துவக்கி வைத்தார்.  அப்போது அவர் பேசுகையில் ஐ.டி. நகராக இருந்த பெங்களூரு குப்பை நகரமாக, குற்றநகரமாக மாறிவிட்டது. இங்கு வாழவே முடியாத அளவ।க்கு நரகமாக மாற்றி விட்டது காங். என்று குற்றம் சாட்டினார்.

அடுத்த 2 வாரத்துக்குள் 28 தொகுதிகளிலும் இந்த பேரணி நடக்கும் என்றும் பா.ஜ. அறிவித்துள்ளது.  பெங்களூரு நகரில் கொலை, கொள்ளை பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு  குற்றங்கள்  அதிகரித்து வருகின்றன.  சட்டம் ஒழுங்கு மிகவும் கெட்டு விட்டது. எனவே பெங்களூரை மீட்க வேண்டும் என்று  பா.ஜ. போராட்டத்தை துவக்கி உள்ளது  இதில்  மத்திய அமைச்சர் அனந்தகுமார், சதானந்தகவுடா  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பெங்களூரை பாதுகாப்போம் என்ற பெயரில் அடுத்த 14 நாட்களுக்கு 28 தொகுதிகளில் பாதயாத்திரையாக சென்று பொதுமக்களிடம் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் என்று பா.ஜ. தலைவர்  அசோக் கூறினார்.

Label