OUR CLIENTS
சிறையில் சசிகலாவுக்கு சலுகை அளித்த டி.ஜி.பி. மீது வழக்கு பதிவு
சிறையில் சசிகலாவுக்கு சலுகை அளித்த டி.ஜி.பி. மீது வழக்கு பதிவு Posted on 03-Mar-2018 சிறையில் சசிகலாவுக்கு சலுகை அளித்த டி.ஜி.பி. மீது வழக்கு பதிவு

பெங்களூரு, மார்ச் 3-

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா வுக்கு தனி சலுகை அளிப்பதற்காக லஞ்சம்பெற்ற தாக கூறப்பட்ட புகாரின் மீது  மாஜி சிறைத்துறை டி.ஜி.பி. மீது வழக்குபதிவு செய்ய கர்நாடகஅரசுஉத்தரவிட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிறையில் 5ஸ்டார் ஓட்டல்போல அமைப்பை உருவாக்கி சாப்பாடு உள்ளிட்ட சொகுசு வசதிகள்  அளிப்பதற்காக லஞ்சம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதை டி.ஐ.ஜி. ரூபா நேரில் பார்வையிட்டு அந்த குற்றச்சாட்டு உண்மையே என அறிக்கை அளித்தார். சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயணா  முதல் கண்காணிப்பாளர் வரை இந்த லஞ்சம் கைமாறி உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து டி.ஜி.பி., டி.ஐ.ஜி. உள்ளிட்ட சிறைத்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இது பற்றி ஓய்வு பெற்ற தலைமைச் செயலாளர் தலை மையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.அவரும் விசாரணை நடத்தி, அறிக்கை அளித்துள்ளார். அதன் விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்தநிலையில் ஓய்வு பெற்றுவிட்ட டி.ஜி.பி.சத்தியநாராயணா உள் ளிட்ட இரு உயர்அதிகாரிகள்மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் எப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடத்த கர்நாடக அரசு கடந்த 26ம் தேதி உத்தரவிட்டுள்ளது. அதன்அடிப்படையில் மாஜி டி.ஜி.பி. சத்தியநாராயணா மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. 3 மாதத்தில் இதன் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படவேண்டும் என்றும் அரசுஉத்தரவிட்டுள்ளது. மேலும் அகில இந்திய காவல்துறை பணியின்நடத்தை நெறிமுறைகளை மீறிய குற்றச்சாட்டு பற்றி  பணியாளர் நலத்துறை தனியாக விசாரணை நடத்தும். சிறைத்துறை அவலங்களை ஊடகங்களுக்குவெளியிட்டதற்காக டிஜிபி சத்திய நாராயணா, டிஐஜி ரூபா மீது இந்த விசாரணை நடத்தப்படும். சிறைத்துறை தலைமை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், கண்காணிப்பா ளர் அனிதா ஆகியோர் மீது கூடுதல் டிஜிபி மட்டத் திலான துறைவாரி விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் அரசுஉத்தரவில் கூறப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி வினய்குமார் கமிட்டி அளித்த அறிக்கை அடிப்படையிலேயே இந்த விசாரணைக்குமாநில அரசு உத்தரவிட்டுள்ளது,

லஞ்சம் கைமாறியது மட்டுமல்லாமல், சிறையில்இருந்து சர்வசாதாரணமாக சசிகலா, இளவரசி ஆகியோர்சுடிதார் அணிந்து சிறையில்இருந்து வெளியே ஷாப்பிங் சென்று வந்த வீடியோ காட்சி கள் பற்றியும் விசாரணை நடத்தப்படுகிறது. இந்த விசாரணையை டிஐஜி ரூபா வரவேற்றுள்ளார். சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டதாக  நான் அளித்த அறிக்கைக்கு  ஆதாரம் இல்லை என்று அந்த வழக்கையே மூடி விட்ட லஞ்ச ஒழிப்புத்துறை, இப்போது அரசு உத்தரவின்பேரில் மீண்டும் வழக்கை விசாரிக்க இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று ரூபா கூறி உள்ளார்.

Label