OUR CLIENTS
சுதந்திர தினவிழாவை சீர்குலைக்க அசாம் மாநிலத்தில் குண்டு வைத்த மாணவர்கள்: பகீர் தகவல்
சுதந்திர தினவிழாவை சீர்குலைக்க அசாம் மாநிலத்தில் குண்டு வைத்த மாணவர்கள்: பகீர் தகவல் Posted on 17-Aug-2016 சுதந்திர தினவிழாவை சீர்குலைக்க அசாம் மாநிலத்தில் குண்டு வைத்த மாணவர்கள்: பகீர் தகவல்

கவுகாத்தி:
நாட்டின் 70-வது சுதந்திர தின விழா கடந்த 15ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அசாமில் இயங்கிவரும் உல்பா தீவிரவாதிகள் அன்று அம்மாநிலத்தில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.


இதையொட்டி மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்த நிலையில், அன்று காலை சுமார் 8 மணியளவில் தின்சுகியா மாவட்டத்தில் உள்ள பிலோபரி சாலையில் அடுத்தடுத்து இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்களை உல்பா தீவிரவாதிகள் நடத்தினர்.

சில நிமிடங்களுக்கு பின்னர் சிவசாகர் மாவட்டத்தில் உள்ள சோனாரி பகுதியிலும் மற்றொரு இடத்திலும் அடுத்தடுத்து  குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. மாநிலத்தில் மொத்தம் ஐந்து பகுதிகளில் நடத்தப்பட்ட மேற்படி குண்டுவெடிப்பு தாக்குதல்களில் உயிர்பலியோ, யாருக்கும் காயமோ ஏற்படவில்லை.

இந்நிலையில், இந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக, தின்சுக்கியா மாவட்டம், கக்கோஜன் பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் இரு மாணவர்களை போலீசார் நேற்று கைது செய்தனர்.

பிசிட்ரா மோரான், மனாப் மோரான் ஆகிய இந்த இரு மாணவர்களிடம் உல்பா தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை தந்துனுப்பியுள்ளனர். 15-ம் தேதி காலை 8 மணியளவில் வெடிக்கும்படி ‘புரோக்ராம்’ செய்யப்பட்டிருந்த ஐந்து குண்டுகளை இந்த இருமாணவர்களும் கடந்த 11-ம் தேதி அதிகாலை 5 மணியளவில் ரகசியமாக புதைத்து வைத்தது தற்போது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இயந்திர துப்பாக்கிகளுடன் வந்த உல்பா தீவிரவாதிகளின் கட்டளைப்படி ஒரு மோட்டார் சைக்கிளில் சென்ற மாணவர்கள் இந்த குண்டுகளை புதைத்து வைத்துள்ளனர்.

Label