OUR CLIENTS
3 மாநில தேர்தல் - பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
3 மாநில தேர்தல் - பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது Posted on 03-Mar-2018 3 மாநில தேர்தல் - பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

 புதுடெல்லி, மார்ச் 3-

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 வடகிழக்கு மாநில சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.  
 
திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 வடகிழக்கு மாநில சட்டசபைகளின் ஆயுட்காலம் முடிவடைவதையொட்டி தேர்தல் கமிஷன் தேர்தலை நடத்த முடிவு செய்தது. அதன்படி திரிபுராவில் கடந்த மாதம் 18-ந்தேதி தேர்தல் நடத்தப்பட்டது. அங்கு 74 சதவீத ஓட்டுகள் பதிவாகின. மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் கடந்த மாதம் 27-ந்தேதி தேர்தல் நடந்தது. மேகாலயாவில் 67 சதவீதமும், நாகாலாந்தில் 75 சதவீதமும் ஓட்டுகள் பதிவானது.

தலா 60 தொகுதிகளை உள்ளடக்கிய இந்த 3 மாநிலங்களிலும் தலா 59 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடந்தது. திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் ஒருவர் மரணம் அடைந்ததால் அங்கு ஒரு தொகுதியில் தேர்தல் நடைபெறவில்லை. மேகாலயாவில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் கொல்லப்பட்டதால் ஒரு தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

நாகாலாந்தை பொறுத்தவரை வடக்கு அங்காமி-2 தொகுதியில் போட்டியிட்ட தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி தலைவர் நெய்பியூ ரியோ போட்டியின்றி வெற்றி பெற்றுவிட்டதால் எஞ்சிய 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது.   இந்த 3 மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. ஓட்டு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அண்மைக்காலமாக வட கிழக்கு மாநிலங்களில் பா.ஜனதாவின் செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில், இந்த மூன்று மாநில தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Label