3 மாநிலங்களுக்கு புதிய கவர்னர் நியமனம்.. மணிப்பூருக்கு நஜ்மா ஹெப்துல்லா! Posted on 17-Aug-2016
டெல்லி:
மணிப்பூர் ஆளுநராக நஜ்மா ஹெப்துல்லாவும், பஞ்சாப் ஆளுநராக வி.பி.சிங் பத்னூரும், அஸ்ஸாம் ஆளுநராக பன்வரிலால் புரோகித்தும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மணிப்பூர், பஞ்சாப் மற்றும் அஸ்ஸாமிற்கு புதிய கவர்னர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.
முன்னாள் மத்திய அமைச்சரான நஜ்மா ஹெப்துல்லா (75), கடந்த மாதம் தான் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து தற்போது அவர் மணிப்பூரின் 18வது கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல், பஞ்சாப் ஆளுநராக வி.பி.சிங் பத்னூரும், அஸ்ஸாம் ஆளுநராக பன்வரிலால் புரோகித்தும் நியமிக்கப் பட்டுள்ளனர்.