OUR CLIENTS
தமிழகத்தின் மொத்த நிதிப் பற்றாக்குறை ரூ.44,481 கோடி
தமிழகத்தின் மொத்த நிதிப் பற்றாக்குறை ரூ.44,481 கோடி Posted on 16-Mar-2018 தமிழகத்தின் மொத்த நிதிப் பற்றாக்குறை ரூ.44,481 கோடி

சென்னை, மார்ச் 16-

தமிழகத்தின் ஒட்டுமொத்த நிதிப் பற்றாக்குறை ரூ. 44,481 கோடியாக அமையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது நிதிப்பற்றாக்குறை சட்டவிதிகளின்படி 3சதவீதத்திற்குள் அமையும் என்று துணை முதல்வர் .பன்னீர்செல்வம் நேற்று பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.

தமிழகத்தின் மொத்த வரவு 2018-2019இல் ரூ.1,76,251 கோடியாக இருக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது. இதில் தமிழக அரசின் மொத்த வரி வருமானம் ரூ.98,693 கோடியாகவும் உள்ளது. பட்ஜெட் மதிப்பீடுகளின்படி தமிழக அரசின் வரி வருமானம் ரூ.1,12,616 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2018-2019இல் தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.17,441 கோடியாகவும், நிதிப்பற்றாக்குறை ரூ.44,481 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

நிதிப்பற்றாக்குறை தமிழகத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 2.70 சதவீதமாக அமையும். இது அரசின் நிதிப்ப ற்றாக்குறை 3 சதவீதத்திற்கு குறைவாக இருக்க வேண்டும் என விதிப்படி அமைந்துள்ளது.

2017 ஜூலை முதல் 2018 பிப்ரவரி மாதம் வரையிலான காலத்தில் ஜிஎஸ்டி அறிமுகப் படுத்தப்பட்டதால் ஏற்பட்ட இழப்பீட்டை ஈடுகட்ட 632 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கியுள்ளது.

தமிழக அரசின் 2018-2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மானியங்களுக்காக மட்டும் ரூ.75,722.76 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

2017-2018ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட மானியச் செலவு ரூ.70,662.74 கோடியாகவும் அதைவிட கூடுதலாக 2018-2019ஆம் ஆண்டுக்கு ரூ.5,000 கோடிக்கு கூடுதலான தொகை மானியச் செலவுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி அறிமுகத்தால் தற்காலிகமாக பின்னடைவைச் சந்தித்த தமிழக அரசின் பொருளாதார வளர்ச்சி மெதுவாக உயர்ந்துவருகிறது. 2017-2018இல் 8.03 சதவீத அளவை எட்டி உள்ளது.

2018-19இல் 9சதவீதமாக ஒட்டுமொத்த தமிழக உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 9 சதவீதமாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் செலவினங்களுக்கு பெருத்த மாற்றங்கள் எதுவும் இல்லை. இயல்பான அளவில் 7வது சம்பளக் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தியதால் மாதச் சம்பளம், ஓய்வூதியம் மட்டுமே உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்கான ஒதுக்கீடு ரூ.52,171 கோடியாக இருக்கும். இது மொத்த வரவில் 40.20 சதவீதமாகும். மாநில அரசின் மொத்த கடன் ரூ, 3,14,366 கோடியாக உள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு மின்வாரியம், மின்வினியோக அமைப்புகளை சீரமைக்க மத்திய அரசின் உதய் திட்டத்தை ஏற்றுக்கொண்டது. அதனால், மின்சார வாரியத்திற்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் இன்னும் அதிகமாக உயர்ந்துள்ளது.

விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு திட்டத்துக்கு ரூ.2017-18இல் தமிழக அரசின் பங்காக ரூ.565 கோடி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த 10.15 லட்சம் விவசாயிகள் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இழப்பீடாக ரூ. 113 கோடி இழப்பீடக பெற்றுள்ளனர். 2018-2019ஆம் ஆண்டு பயிர்க் காப்பீட்டுத் திட்டத்திற்கான பிரிமியத்துக்கு தமிழக அரசின் பங்குத் தொகையாக வழங்க ரூ.520 ஒதுக்கப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் பொது நிலங்களில் குடியிருப்போருக்கு வீட்டு மனை ஒதுக்கீடு செய்யப்படும். நீர்ப்பிடிப்பு புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு தனியார் நிலங்களை அரசு கையகப்படுத்தி அவர்களுக்கு வீட்டு மனை ஒதுக்கப்படும்.

வேளாண் துறையில் ஒப்பந்தமுறையில் உற்பத்திக்கென தமிழக அரசின் புதிய சட்டம் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

சிறப்பு உணவு பதப்படுத்தும் கொள்கையையும் தமிழக அரசு புதிதாக அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.

 

தண்ணீர் பற்றாக்குறை தமிழகம் முழுவதும் நிலவுகின்ற காரணத்தினால், தண்ணீரை சிக்கனமாக செலவிட வகை செய்யும் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

 

விவசாயத் துறையில் ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தை அமல்படுத்த அரசு தீர்மானித்துள்ளது.

 

கரும்பு விவசாயிகளுக்கு உற்பத்தி ஊக்குவிப்பு தொகை வழங்க ரூ. 200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

55,000 ஏக்கரில் நவீன முறையில் கரும்பு சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

 

விவசாயிகளுக்கு உதவ உழவன் என்ற பெயரில் புதிய செயலி இலவசமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

 

கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விவசாயிகளுக்கு ரூ. 8,000 கோடி பயிர்க்கடன் வழங்கவும் வரவு செலவு திட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் ஏற்கனவெ அமல்செய்யப்பட்டுவரும் குடிமராமத்து பணிகளைத் தொடர திட்டமிட்டுள்ளது. அதற்காக 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

தமிழக ஆறுகளில் தடுப்பணைகள் அமைக்க ரூ. 250 கோடியும் அணைகளை புணரமைக்க ரூ 166 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கு ரூ. 1,789 கோடியில் திட்ட அனுமதி விரைவில் வழங்கப்படும் எனவும் வரவு செலவு திட்டத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

 

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கு ரூ. 1,361 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

போக்குவரத்து துறையில் புதிதாக 3000 பேருந்துகளை வாங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.

 

பள்ளிக் கல்வி துறையில் 200 பள்ளிகளை தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு மானியச் செலவுகளுக்காக ரூ 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் அண்ணாமலை பல்கலைக்கு மட்டும் ரூ. 250 கோடி வழங்கப்படும் எனவும் வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

பள்ளி, கல்லூரிகளில் வழங்கப்படும் இலவச மடிக் கணினி திட்டத்திற்கு ரூ. 758 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா பொருட்கள், சீருடை, பேருந்து கட்டண சலுகைக்கு ரூ. 1,653.89 கோடி ஒதுக்கீடு

 

உள்ளாட்சி தேர்தல் நடத்த ரூ. 172.27 கோடி ஒதுக்கப்படும் எனவும் வரவு செலவு திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ரேஷன் இழப்பீடை ஈடுகட்ட திட்டம்

 

கூட்டு நிறுவனங்களுக்கான பொது விநியோகத் திட்டப்பணிகளில் ஏற்பட்ட இழப்பீட்டை ஈடுசெய்ய 2017 - 2018இல் திருத்தப்பட்ட மதிப்பீடாக ரூ 437 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

2018 - 2019இல் கூட்டுறவு நிறுவனங்களுக்கான இழப்பீடை ஈடுகட்ட ரூ. 460 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

பொது விநியோகத் திட்டத்தில் வழங்குவதற்கான பயறு வகைகளை நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

 

உணவு மானியத்திற்காக ரூ 6,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

சென்னை பெருநகர வளர்ச்சி இயக்கப் பணிகள் தொடரும். இதற்காக ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கான கடன் உச்சவரம்பு ரூ. 1 கோடியிலிருந்து ரூ. 5 கோடியாக உயர்த்தப்படும்.

Label