OUR CLIENTS
தனிக்கட்சி அல்ல தனி அமைப்பு அழுத்தம் திருத்தமாக கூறும் தினகரன்
தனிக்கட்சி அல்ல தனி அமைப்பு அழுத்தம் திருத்தமாக கூறும் தினகரன் Posted on 16-Mar-2018 தனிக்கட்சி அல்ல தனி அமைப்பு  அழுத்தம் திருத்தமாக கூறும் தினகரன்

 தனிக்கட்சி அல்ல தனி அமைப்பு

அழுத்தம் திருத்தமாக கூறும் தினகரன்

 சென்னை, மார்ச் 16-

தினகரன் அறிவித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்பது அரசியல் அமைப்பு என்று கூறுவதற்கு காரணம் ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக தினகரன் தனி அமைப்பை தொடங்க திட்டமிட்டார். பின்னர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்று மதுரையில் தனது அமைப்பின் பெயரை அறிவித்துவிட்டார். ஆனால் நிருபர்கள் அரசியல் கட்சி என்ற போதெல்லாம், தவறு இது அரசியல் கட்சியல்ல, அரசியல் அமைப்பு என்று அழுத்தம் திருத்தமாக கூறி வருகிறார்.

இதுபோல் தினகரன் தான் தொடங்கியது அரசியல் கட்சி அல்ல, அரசியல் அமைப்பு என்று கூறியதற்கான காரணம் என்ன என்ற கேள்வி எழுந்தது. இந்த காரணத்தை பார்த்தபோதுதான் தினகரன் எத்தனை அழகாக காய் நகர்த்துகிறார் என்பது கண்கூடுதினகரன் தனிகட்சி தொடங்கினால் இதில் எடப்பாடி தரப்புக்குத்தான் லாபம் என்பது தினகரனுக்கு நன்றாகவே தெரியும். தனி கட்சி தொடங்கினால் சசிகலாவால் அதிமுக துணை பொதுச் செயலாளர் என்று நியமிக்கப்பட்ட பதவி பறிபோய்விடும்.

அதிமுகவை மீட்பது என்பது தினகரனுக்கு எட்டாக்கனியாகிவிடும். மேலும் 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கும் எடப்பாடி அணிக்கு சாதகமாகவே முடிந்துவிடும். இதை உணர்ந்தே தினகரன் தனி கட்சி தொடங்கினால் நாங்கள் அதில் இணையமாட்டோம் என்று தங்கதமிழ் செல்வன் கூறியிருந்தது நினைவுக்கூரத்தக்கது.

தனி கட்சி தொடங்கினால் முழு பலனை எடப்பாடி அணியே அனுபவிக்கும் என்பதை நன்கு அறிந்து கொண்டு தனி அமைப்பு என்று தினகரன் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி வருகிறார்.

 -------------------------------------------------------------------------------------------------------------

 முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

மத்திய அரசு திட்டத்துடன் இணைகிறது

 சென்னை, மார்ச் 16-

தமிழ்நாடு அரசின் 2018--2019ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு சட்டப் பேரவையில் நேற்று தாக்கல் செய்தார் முதலமைச்சர் எடிப்பாடி கே. பழனிசாமி. பட்ஜெட் உரையை நிதியமைச்சரும் துணை முதல்வருமான . பன்னீர்செல்வம் வாசித்தார்

தமிழகத்தில் உள்ள முதலமைச்சரின்  விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மத்திய அரசு தேசிய மருத்துவப் பாதுகாப்புத் திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டு செயல் படுத்தப்படும் தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு ரூ. 1361.60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த அரசின் முன்னோடித் திட்டமானமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், ஏழை எளிய மக்களும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனைத்து அதிநவீன சிகிச்சைகளைப் பெற வழிவகுத்துள்ளது.

இதன்மூலம் அனைவருக்கும் தரமான மருத்துவ சேவை என்ற குறிக்கோளை மாநிலம் எட்ட இத்திட்டம் உதவியுள்ளதுஅண்மையில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் ஒரு அங்கமான, தேசிய மருத்துவப் பாதுகாப்புத் திட்டத்துடன், இத்திட்டமும் ஒருங்கிணைக்கப்பட்டு செயல்படுத்தப்படும்

2018--2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், ‘முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்காக 1,361.60 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 -------------------------------------

 எச் ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி மனு தள்ளுபடி

 சென்னை, மார்ச் 16-

பெரியார் சிலை விவகாரத்தில் எச் ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

அண்மையில் திரிபுராவில் ஆட்சியமைத்த பாஜக அங்கிருந்த லெனின் சிலைகளை அகற்றியது. இந்த வீடியோவை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா திரிபுராவில் லெனின் சிலைகள் உடைக்கப்பட்டதை போல் தமிழகத்தில் பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் எச் ராஜாவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. இதையடுத்து தனது அனுமதியின்றி தன்னுடைய அட்மின் போட்டுவிட்டதாக கூறி வருத்தம் தெரிவித்தார் எச் ராஜா. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எச் ராஜா, தமிழை தந்தை பெரியார் சனியன் என்றார் எனக்கூறி சர்ச்சையை கிளப்பினார். இதையடுத்து தபெதிகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆனூர் ஜெகதீசன் எச் ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தமிழ்நாட்டுக்குள் எச்.ராஜா நுழையவும் தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த ஹைகோர்ட் நீதிபதி ரமேஷ், தனி நபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றார். எச் ராஜாவை மீது காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு அவகாசம் வழங்காமலேயே ஜெகதீசன் நீதிமன்றத்தை அனுகியுள்ளார் எனவே மனுவை தள்ளுபடி செய்கிறேன் என நீதிபதி உத்தரவிட்டார்.

 ----------------------------------------

 ரஜினிகாந்த் கட்சியில் மகள் சௌந்தர்யாவுக்கு முக்கிய பொறுப்பு!

 சென்னை, மார்ச் 16-

ரஜினிகாந்த், தனது கட்சியில் தனது இளைய மகள் சௌந்தர்யாவிற்கு முக்கிய பொறுப்பு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிக்கு அடுத்த இடத்தில் இருக்கும்படி கட்சியில், சௌந்தர்யாவுக்கு முக்கியப் பொறுப்பு  கொடுக்கப் படுவதாகவும், அதற்கான வேலைகளில் தற்போது சௌந்தர்யா மும்முரம் காட்டி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

 ---------------------------------------------------

 அம்மா உணவகத்தில் இருந்து உணவு வாங்கி கூடுதல் விலைக்கு விற்கும் ஸ்ரீபாண்டு உணவகம்!

 திருவள்ளூர், மார்ச் 16- 

திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் அடுத்த ஆவடியில் அமைந்துள்ளது ஸ்ரீபாண்டு உணவகம் மற்றும் ஸ்ரீ சுசீலா மஹால். இந்த இடத்தில் பார்க்கிங் வசதியில்லாமல் கட்டியுள்ளனர். இதற்கு அருகாமையில் பத்திரப்பதிவு அலுவலகம், தனி வட்டாட்சியர் அலுவலகம், அம்மா உணவகம் மற்றும் துணை காவல் ஆணையாளர் அலுவலகம் ஒருங்கே அமைந்துள்ளது. இங்கு ஒரு நாளைக்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். ஆதலால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பாண்டு உணவகத்தில் அம்மா உணவகத்தில் இருந்து தயிர் சாதம், லெமன் சாதம், சாம்பார் சாதம் போன்றவற்றை வாங்கிக்கொண்டு இவர்கள் உணவகத்தில் வைத்து நூதன முறையில் 35 ரூபாய்க்கு விற்கின்றனர் என்று பொதுமக்கள் சார்பில் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுமட்டும் இல்லாமல் காஸ் மற்றும் காய்கனிகளும் அம்மா உணவகத்தில் இருந்து தாராளமாக எடுத்துச் செல்வதாகவும் பகீர் குற்றச்சாட்டை கூறுகின்றனர். இங்கு இயங்கும் உணவம் சுத்தமின்றியும், உணவு சுவையில்லாமலும் உள்ளது என்றும் சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர். இவர்கள் மீது உணவு பாதுகாப்பு அலுவலர் மற்றும் ஆவடி நகராட்சி நிர்வாகம் சட்டரீதியான நடவடிக்கை எடுக்குமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். ஸ்ரீபாண்டு உணவகம் மீது உணவு பாதுகாப்பு அலுவலர் மற்றும் ஆவடி நகராட்சி நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 -----------------------------------------

 காட்பாடி வள்ளிமலை ரோட்டில் மாநகராட்சி குடிநீர் இணைப்பில்

தண்ணீர் பிடித்து வீடு கட்டும் அவலம் தொடர்கதையாகிறது!

 வேலூர், மார்ச் 16-

வேலூர் மாவட்டம், காட்பாடி வள்ளிமலை ரோட்டில் பள்ளிக்குப்பம் செல்லும் வழியில் பொதுமக்கள் சிரமமின்றி தண்ணீர் பிடித்து பயன்படுத்திக் கொள்ள மாநகராட்சி நிர்வாகம் (2-வது வார்டில்) பொதுக்குழாய்களை தெருவோரங்களில் ஆங்காங்கே பொருத்தி கொடுத்துள்ளது.

இந்நிலையில் அந்த குடிநீர் இணைப்பை பல சமூக விரோதிகள் தவறாக பயன்படுத்தி தண்ணீரை குடங்களில் பிடித்தும், ஹோஸ் பைப் பொருத்தியும் நீரை உறிஞ்சி எடுக்கின்றனர். இப்படி எடுக்கப்படும் தண்ணீரை பலர் தவறான வழிகளில் வீடு கட்ட பயன்படுத்துகின்றனர். பலர் மாடுகள் குளிப்பாட்டவும், வாகனங்கள் கழுவவும் பயன்படுத்தி வருகின்றனர். இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது மாநகராட்சி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.

ஆங்காங்கே தண்ணீர் இல்லாமல் வேலூரில் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் தெருவில் அல்லாடுவதை கண்களால் பார்க்க முடிகிறது. ஆனால் காட்பாடி வள்ளிமலை ரோட்டில் 2-வது வார்டில் நடைபெறும் அத்துமீறல்களுக்கு அளவே இல்லை. குறிப்பாக பள்ளிக்குப்பத்தில் இருந்து வந்து வீடு கட்டும் சிலர் இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். கட்டட மேஸ்திரிகள் சொன்னாலும் வீடு கட்டும் வீட்டின் உரிமையாளர்கள் நான் பார்த்து கொள்கிறேன், நீ வீடு கட்டும் வேலையை பார் என்று சொல்கிறார்களாம்.

தண்ணீர் திறந்து விடும் ஆப்ரேட்டருக்கு ரூ.200 டிப்ஸ் கொடுத்துவிட்டு மின்சார செலவு இல்லாமல் மாநகராட்சி குடிநீர் இணைப்பில் தண்ணீர் பிடித்து வீடு கட்டி வருகின்றனர். இதற்காக ஆங்காங்கே குழி வெட்டி வைத்து கொண்டு தண்ணீர் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். வேலூர் மாநகராட்சி ஆணையர் வள்ளிமலை ரோட்டில் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். துணை ஆணையர் 1-வது மண்டலத்தில் மதிவாணன் எதைப்பற்றியும் அவர் கண்டும் காணாமல் இருந்து வருகிறார். சட்டப்படி நடவடிக்கை எடுத்து வள்ளிமலை ரோட்டில் லஷ்மி நகர் நுழைவு பகுதியில் உள்ள இரண்டு பொது தெருகுழாய் இணைப்புகள், அதற்கு அடுத்துள்ள ஒரு பொது குழாய் இணைப்பு ஆகியவற்றை உடனடியாக துண்டிக்க வேண்டும். இல்லையெனில் தண்ணீர் திருட்டில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து வீடு கட்டும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் ரூ.200க்கு ஆசைப்பட்டு இதுபோன்ற குற்றச் செயல்களுக்கு மாநகராட்சி குடிநீர் ஆப்ரேட்டர்கள் துணை போகின்றனர். இது வெட்ககேடானது. குறிப்பாக வேலூர் மாநகராட்சி மண்டலம் 1ல் நடக்கும் பல்வேறு முறைகேடுகள் தடுக்கப்படுவதே இல்லை. பொதுமக்கள் தவறு செய்ய மாநகராட்சி ஊழியர்களே துணை போகின்றனர். மாநகராட்சி ஆணையர் வேலூர் மண்டலம் 3ல் சொத்து வரி ஏய்ப்பு செய்தவர்கள் தொடர்பாக பட்டியல் தயாரித்து மாநகர மக்கள் மத்தியில் நற்பெயர் பெற்றுள்ளார். இதேபோன்று 1-வது மண்டலத்தில் நடைபெறும் இதுபோன்ற தெருக்குழாய்களை வள்ளிமலை ரோட்டில் லஷ்மி நகர் நுழைவு வாயிலில் இருபுறமும் உள்ள அனுமதி பெறாமல் தங்கள் விருப்பம் போல் எடுத்துக் கொண்ட பொதுக்குழாய் இணைப்பு, கதவிலக்க எண்:9க்கு பக்கத்தில் உள்ள தெரு பொதுக்குழாய் இணைப்புகளை நிரந்தரமாக துண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மாநகராட்சி ஆணையரின் அதிரடி நடவடிக்கையை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 -------------------------------------------------

 

Label