OUR CLIENTS
வேலூர் மாநகராட்சிக்கு சொத்து வரி நிலுவை : பெயர் பட்டியல் பதாகைகள் வாயிலாக அசத்தல் நடவடிக்கை!
வேலூர் மாநகராட்சிக்கு சொத்து வரி நிலுவை : பெயர் பட்டியல் பதாகைகள் வாயிலாக அசத்தல் நடவடிக்கை! Posted on 16-Mar-2018 வேலூர் மாநகராட்சிக்கு சொத்து வரி நிலுவை : பெயர் பட்டியல் பதாகைகள்  வாயிலாக அசத்தல் நடவடிக்கை!

வேலூர் மாநகராட்சிக்கு சொத்து வரி நிலுவை
பெயர் பட்டியல் பதாகைகள்  வாயிலாக அசத்தல் நடவடிக்கை!
அதிகார வர்கத்துக்கு எதிராக அதிரடி நடிவடிக்கை மேற்கொண்ட மாநகராட்சி ஆணையர்

வேலூர், மார்ச் 16-
வேலூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரியை நீண்ட காலமாக செலுத்தாமல் இருந்து வந்தவர்களின் பெயர், அவர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகை உள்ளிட்ட விவரங்களுடன் அந்தந்த வார்டுகளில் 3-வது மண்டலத்தில் டிஜிட்டல் பேனர்களுடன் அறிவிப்பு செய்து மாநகராட்சி புதிய யுக்தியை கையாண்டுள்ளது.

வேலூர் மாநகராட்சியானது வரி வசூலிப்பதில் மிகவும் பின்தங்கியே காணப்ப்டடது. பலமுறை கட்டட உரிமையாளர்களிடம் அறிவுறுத்தியும் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிப்பணத்தை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். வரித்தண்டலர்கள் வீடு வீடாக சென்று சொத்து வரியை செலுத்துமாறு சொல்லி கேட்டாலும் பல சொத்துக்களின் உரிமையாளர்கள் அலட்சியப் போக்குடன் நடந்து வந்தனர். இதனால் நிதி பற்றாக்குறை மாநகராட்சிககு ஏற்பட்டது. 


இதையடுத்து மாநகராட்சி ஆணையர் விஜயகுமார் சொத்து வரியை உரியவர்கள் எப்படி செலுத்தச் செய்வது என்று நீண்ட யோசனைக்கு பிறகு ஒரு வழியை தேர்வு செய்தார். இதன் முடிவில் எந்தெந்த வார்டுகளில் யார் யார் மாநகராட்சிக்கு எவ்வளவு சொத்து வரி செலுத்த வேண்டும் என்ற பட்டியலை தயார்படுத்தச் சொன்னார். பின்னர் யார் யார் எவ்வளவு தொகையை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும் என்று பெயர் பட்டியலுடன் கூடிய டிஜிட்டல் பேனர்களை பொதுமக்கள் பார்வையில் விழும் வகையில் மின்கம்பங்களில் கட்டி வைத்தனர். இதைப்  பார்த்ததும் தங்களது பெயர், தாங்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய தொகை ஆகியவற்றை மற்றவர்கள் பார்வைக்கு விருந்தாகும் வகையில் பட்டியலுடன் விவரித்து அறிவிப்பு பலகை வைத்தது குறித்த தகவல் தொடர்புடைய நபர்கள் கவனத்துக்கு சென்றது.


இதனால் ஆத்திரமடைந்த சில தொழிலதிபர்கள் உட்பட பலரும் மாநகராட்சி மண்டல அலுவலர்களை தொடர்பு கொண்டு, இப்படி எங்கள் பெயரை பேனரில் போட்டு எவ்வளவு தொகை செலுத்த «வ்ண்டும் என்று பட்டியலை முச்சந்தியில் வைத்து எங்கள் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தி விட்டீர்களே என்று கேட்டுள்ளனர். 

குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், வசதி படைத்தவர்கள்தான், வரிஏய்ப்பவர்களாக உள்ளார்கள் என்பதை இந்த அறிவிப்பு பதாகைகள் வாயிலாக புலப்படுகிறது. ஏழை எளிய மக்கள் பயத்துடன் குறிப்பிட்ட காலத்துக்குள் குடிநீர் வரி, பாதாள சாக்கடை, சொத்துவரி என அனைத்தையும் நிலுவையின்றி கட்டிவிடுகின்றனர். பணம் படைத்தவர்கள் மட்டுமே இதுபோன்று நிலுவை வைப்பதாக பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர். வரி ஏய்ப்பு செய்து லஞ்சத்தின் வாயிலாக அதிகாரிகளை அடக்கிவிடலாம் என்ற எண்ணம் இதற்கு காரணம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். அனைத்து அதிகாரிகளும் கையூட்டு பெறுபவர்கள் அல்ல.... துணிச்சலான நேர்மையான அதிகாரிகளும் உள்ளனர் என்பதையே இச்செயல் நிரூபித்துள்ளது. 


மாநகராட்சி வரியை செலுத்தாமல்¢ வரி ஏய்ப்பவர் எப்படி ஜிஎஸ்டி ஒழுங்காக கட்டுவார்கள் என்பதும் கேள்விக்குறிதான். பணம் படைத்தவர்களே இவ்வாறு செய்வது ஏழ்மையானவர்களிடமிருந்து  திருடுவதற்கு சமம் என்பதை ஏன் உணர மறுக்கிறார்கள் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். 

வரிப்பணத்தை வசூல் செய்ய மாநகராட்சி நிர்வாகம் கையாண்டுள்ள இந்த நூதன விதம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதைப்பார்க்கும் பொதுமக்கள் யாவரும் மாநகராட்சிக்கு செலுத்தாத வரி இனங்களை விரைவாக செலுத்த வேண்டும் என்ற எண்ணத்தை அவர்கள் மனதில் தூண்டியுள்ளனர். இந்த பெருமை அனைத்தும் மாநகராட்சி ஆணையர் விஜயகுமாரையே சாரும். இதனால் பல ஆண்டுகளாக வசூலிக்க முடியாமல் இருந்த வரிப்பணம் மாநகராட்சி கஜானாவுக்கு வந்து குவியத் தொடங்கியுள்ளது என்றே சொல்லலாம். 

மாநகராட்சி ஆணையர் விஜயகுமாரை பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்த துணிச்சலான நடவடிக்கைக்கு 3வது மண்டலம் ஏசி செந்தில்குமாருடைய ஒத்துழைப்பையும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.  

இதேபோன்று, அண்மையில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருந்த ஆக்கிரமிப்பு மற்றும் அனுமதி பெறாத விளம்பர பதாகைகளை துணிச்சலுடன் மாநகராட்சி ஆணையரின் உத்தரவின் பேரில் 3வது மண்டல ஏசி செந்தில்குமார் மிகச்சிறப்பாக செயல்பட்டதையும் சமூக ஆர்வலர்கள் நினைவுகூர்ந்து பாராட்டிய வண்ணம் உள்ளனர். 

இதுபோன்று பிற மண்டலத்திலும், தமிழகம் முழுவதிலும் இதுபோன்ற நடவடிக்கை மேற்கொண்டால் மாநகராட்சிக்கு தேவையான நிதி கிடைத்துவிடும். இதனடிப்படையில் உட்கட்டமைப்பு வசதியை எளிதாக செய்ய வழிபிறக்கும்.  

மாநகராட்சி ஆணையர் விஜயகுமாருடைய துணிச்சலான செயலை பாராட்ட வார்த்தைகள் இல்லையென்று பொதுமக்கள் புகழாரம் சூட்டுகின்றனர். மாநகராட்சி ஆணையரின் முயற்சிக்கு நாமும் துணை நிற்போமாக... 

Label