OUR CLIENTS
தொடர்ந்து கட்டண கொள்ளை! தரமற்ற கல்வி...!!
தொடர்ந்து கட்டண கொள்ளை! தரமற்ற கல்வி...!! Posted on 16-Mar-2018 தொடர்ந்து கட்டண கொள்ளை! தரமற்ற கல்வி...!!

காட்பாடி செயின்ட் மார்க்ஸ் மெட்ரிக் பள்ளியில்
தொடர்ந்து கட்டண கொள்ளை! தரமற்ற கல்வி...!!
மனநோயாளியாகும் மாணவர்கள்& ரத்தக்கண்ணீர் வடிக்கும் பெற்றோர்கள் 

காட்பாடி, மார்ச் 16-
வேலூர் மாவட்டம், காட்பாடி வி.ஜி.ராவ் நகரில் குடியிருப்புகளுக்கு மத்தியில் புறாக்கூடு போன்று செயின்ட் மார்க்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியில் கல்வி கற்றுத்தரும் பணியோ மிகவும் குறைவு. வகுப்பறையில் மாணவ, மாணவிகளுக்கு பாடம் கற்பிக்கின்றார்களோ இல்லையோ   பணத்தில் மட்டும் குறியாக இருக்கின்றது பள்ளி நிர்வாகம். இதற்காக பள்ளி ஆசிரியர்களை பலிகடா ஆக்குகின்றனர். பள்ளி இறைவணக்க கூட்டம் நடைபெறும் இடத்தில் ஆரம்பித்து  வகுப்புக்குள் சென்றாலும் கல்வி கட்டணம் செலுத்தி  விட்டீர்களா? ஏன் செலுத்தவில்லை? என்று கேட்டு மாணவ, மாணவிகளை தொந்தரவு செய்து விடுகின்றது பள்ளி நிர்வாகம். 
பள்ளியில் கல்வி கட்டணம் செலுத்தாத மாணவ, மாணவிகளை தனிமைப்படுத்தி  பாடம் கற்பிக்காமல் அவர்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்குகின்றது பள்ளி நிர்வாகம்.  மாணவ, மாணவிகளை முட்டி போடச் செய்வது, வகுப்பறையில் இருந்து வெளியில் நிற்க வைத்து தண்டனை  வழங்குவது, உடற்கல்வி ஆசிரிய, ஆசிரியைகள்  கூட மாணவ, மாணவிகளை அடிக்கடி தாக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. புறாக்கூடு போன்று மேலும் மேலும் கட்டடங்களை எழுப்பி காற்றோட்டமாக இல்லாமல் வகுப்பறைகளை வைத்து கொண்டு செயல்படுகிறது இந்த பள்ளி என்று சொன்னால் அது மிகையாகாது.
சுற்றுப்புறச்சூழல் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. புதர்மண்டி கொசுக்கள் அதிகம் உற்பத்தி செய்யும் ஒரு திறந்தவெளி தொழிற்சாலை போன்று செயல்படுகிறது செயின்ட் மார்க்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி. 9ம் வகுப்பு பயிலும் மாணவனுக்கு கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் தெரியவில்லை. தமிழ் வரவே இல்லை. இப்படி குறைகளை மட்டும் அடுக்கி கொண்டே போகலாம். வெளியில் எங்கள் பள்ளி சிறந்த பள்ளி, முதலிடம் பெறுகிறது என்று அண்டபுழுகன் ஆகாச புழுகன் என்ற நிலையில்  பள்ளி நிர்வாகம் தான்தோன்றி தனமாக செயல்படுகிறது.  
அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை வசூல் செய்யாமல் தன் விருப்பத்துக்கு கல்வி கட்டணம் வசூலிக்கப் படுகிறது. பெற்றோர்கள் பலர் கல்வி கட்டணத்தை செலுத்தவே ரத்தக் கண்ணீர் வடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கல்வி கட்டணம் செலுத்தாதவர்கள் (பிஞ்சு உள்ளங்கள்) மனதில்  நஞ்சை  விதைக்கின்றனர். பள்ளி கட்டணம் செலுத்தவில்லை யென்றால் பெற்றோரிடம்தான் கேட்கவேண்டும், இதைவிடுத்து மாணவர்களிடம் தகாதவார்த்தைகளில் பேசுவது, மாணவர்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்குவது போன்ற இழிவான செயல்களில் ஈடுபடகூடாது.  அரசு கட்டணத்தைதான் கட்டுவேன் என்று ஒரு பெற்றோர் கூறியுள்ளார், அதற்கு அவரிடம் பிச்சை போடுவதாக நினைத்துகொள்கிறோம் என்றெல்லாம் தாகாத வார்த்தைகளில் பேசியுள்ளனர் பள்ளி நிர்வாகம். பள்ளி கட்டணம் செலுத்தினால் உரிய ரசிது தருவதில்லை, தவிர ஒரு துண்டு சீட்டு தான் தருகின்றனர். 
மெல்ல மெல்ல இந்து மாணவர்களை மதமாற்றம் செய்யும் முயற்சியிலும் மறைமுகமாக பள்ளி நிர்வாகம் செயல்படுகிறது என்று பெற்றோர்கள் தரப்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 
இந்த பள்ளிக்கு  விளையாட்டு  மைதானம் என்பது பள்ளியில் இல்லை. இதற்காக  சிறிது தொலைவு நடந்து செல்ல வேண்டும். கணிவோடு பழக வேண்டிய ஆசிரியர்கள் ஏதோ எதிரிகளை பார்ப்பது போன்று மாணவர்களை பாவிக்கின்றனர்.      கல்வி கற்றுத்தர  வேண்டுமென்ற எண்ணமே    துளிகூட இல்லை.   
குடிநீர் வசதி   சரிவர செய்து தரவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கழிப்பறை வசதி சரிவர இல்லை என்று இல்லை என்பதே அதிகம் இடம்பெற ஆரம்பித்துள்ளது. இப்படி அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளியாக செயின்ட் மார்க்ஸ் பள்ளி திகழ்கிறது. இதை களைவோர்தான்   யாரும் இல்லை என்று சொல்லலாம் சமூக ஆர்வலர்களும் பெற்றோர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.இப்படி பலதரப்பட்ட குறைகளுடன் பள்ளி செயல்படுகிறது. 
மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் இந்த பள்ளியில் ஆய்வு செய்தால் இங்கு என்னென்ன தில்லு முல்லுகள் உள்ளன என்பது வெளிவர ஆரம்பித்து விடும்.  இவ்வாறு அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளியை வைத்து கொண்டு மாணவர்களை வாட்டி வதைக்கும் பள்ளி மீது  கல்வித்துறை  நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.                    

Label