OUR CLIENTS
மாநிலங்களவையில் நவநீதகிருஷ்ணன் பேசியது உணர்வுப் பூர்வமானது - கனிமொழி
மாநிலங்களவையில் நவநீதகிருஷ்ணன் பேசியது உணர்வுப் பூர்வமானது - கனிமொழி Posted on 29-Mar-2018 மாநிலங்களவையில் நவநீதகிருஷ்ணன் பேசியது உணர்வுப் பூர்வமானது - கனிமொழி

 சென்னை, மார்ச் 29-

மாநிலங்களவையில் .தி.மு.. எம்.பி. நவநீதகிருண்ணன் பேசியது உணர்வுப்பூர்வமானது என்று தி.மு.. எம்.பி. கனிமொழி கூறினார்.

சென்னை விமான நிலையத்தில் தி.மு.. எம்.பி. கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, காவிரி விவகாரம் தொடர்பாக தி.மு..வின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கூறியதாவது:-  கர்நாடகத்தில் நடக்கும் தேர்தலுக்காகத்தான் தமிழக அரசாங்கத்தையும் தமிழக விவசாயிகளையும் மத்திய அரசு வஞ்சித்துக்கொண்டிருக்கிறது. வரும் 30-ம் தேதி திமுக செயல் தலைவர் ஸ்டாலின், செயற்குழுவை கூட்டியிருக்கிறார். அதில் திமுக மேற்கொண்டு என்ன நடவடிக்கை மேற்கொள்ளும் என்பது பற்றி பேசி முடிவு எடுக்கப்படும்இவ்வாறு அவர் கூறினார்.

 பாராளுமன்றத்தில் அதிமுக எம்.பி. நவநீத கிருஷ்ணன் பேசியபோது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வோம் என்று தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி கனிமொழியிடம் கேட்டபோது, ‘அவர் உணர்வுப்பூர்வமாக கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அதைப்பற்றி விமர்சனம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றார்.

பாராளுமன்றத்தில்   பேசிய கனிமொழி எம்.பி., தமிழ்நாட்டில் தற்போது உள்ள மிக முக்கியமான பிரச்சனை காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தான் என்றும், இந்த விஷயத்தில் மத்திய அரசு விரைவில் நல்ல முடிவு எடுக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.

Label