OUR CLIENTS
மத்திய அரசும் மாநில அரசும் மக்களை ஏமாற்றுகின்றன - தமிழக அரசுக்கு துரைமுருகன் கண்டனம்
மத்திய அரசும் மாநில அரசும் மக்களை ஏமாற்றுகின்றன - தமிழக அரசுக்கு துரைமுருகன் கண்டனம் Posted on 29-Mar-2018 மத்திய அரசும் மாநில அரசும் மக்களை ஏமாற்றுகின்றன - தமிழக அரசுக்கு துரைமுருகன் கண்டனம்

சென்னை, மார்ச் 29-

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு கடைசி நேரத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்துவதால் எந்த பயனும் இல்லை. மத்திய அரசும் மாநில அரசும் மக்களை ஏமாற்றுகின்றன  என திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கூறினார்

காவிரி விவகாரம் தொடர்பான தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள காலக்கெடு இன்றுடன் நிறைவடைந்தது. ஆனால், தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. மாறாக தீர்ப்பில் உள்ள ஸ்கீம் (திட்டம்) குறித்து விளக்கம் கோரி உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளது. இதையடுத்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆலோசனை நடத்தினார்.

 இந்நிலையில் தி.மு.. முதன்மைச் செயலாளர் துரைமுருகன் இன்று  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மாநில அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார். அவர் கூறியதாவது:-  காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு முடியும் நாளில் முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார். ஏன் முன்கூட்டியே நடத்தவில்லை? கடைசி நாள் வரை காத்திருக்க வேண்டுமா? இந்த கூட்டம் நடத்தி தீர்மானம் போட்டால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டுவிடுமா? தீர்ப்பில் கூறப்பட்டுள்ள "ஸ்கீம்" (திட்டம்) குறித்து கடைசி நேரத்தில் தான் மத்திய அரசு விளக்கம் கேட்குமாகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தது? காவிரி விவகாரத்தில் முதல்வரை பிரதமர் சந்திக்க மறுத்ததாக எங்களிடம் கூறினார்கள். முதல்வரும் துணை முதல்வரும் டெல்லி சென்று மேலாண்மை வாரியம் வேண்டும் என கேட்க வேண்டியதுதானே? தீர்மானம் நிறைவேற்றினால் மட்டும் போதாதுமத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்.

 அதிமுக  எம்பிக்கள் பிரதமர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தியிருக்கலாம். ஏன் செய்யவில்லைமத்திய அரசை எதிர்த்தால் அடுத்த நாள் யாருக்கும் அமைச்சர் பதவி இருக்காது. மத்திய அரசை எதிர்க்கும் துணிச்சல் தமிழக அரசுக்கு இல்லை. மேலாண்மை வாரியம் அமைத்துவிட்டால் கர்நாடகாவில் பாஜக வாக்கு சேகரிக்க முடியாதுஇந்த விஷயத்தில் மத்திய அரசும் மாநில அரசும் மக்களை ஏமாற்றுகின்றன.   இவ்வாறு அவர் கூறினார்.

Label